வரவேற்பு கிடைச்சிருந்தா 4 பாகம் எடுத்திருப்பேன்.. செல்வராகவன் என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

சென்னை : நடிகர் கார்த்தி, ரீமா சென், ஆன்ட்ரியா, பிரதாப் போத்தன் ஆகியோர் நடிப்பில் உருவாகி கடந்த 2010ம் ஆண்டில் வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன்.

சோழர்களின் வரலாற்றை கதைக்களமாக வைத்து பொன்னியின் செல்வன் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், அதை மையமாக வைத்து வெளியானது இந்தப் படம்.

இந்தப் படத்திலும் பாண்டியர்கள் மற்றும் சோழர்களின் பிணக்கே கதைக்களமாக கொள்ளப்பட்டிருந்தது.

ஆயிரத்தில் ஒருவன் படம்

ஆயிரத்தில் ஒருவன் படம்

நடிகர்கள் கார்த்தி, ரீமா சென், ஆன்ட்ரியா, பார்த்திபன் பிரதாப் போத்தன் ஆகியோர் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டில் வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். தற்போது சோழர்களின் வரலாற்றை மையமாக கொண்டு பொன்னியின் செல்வன் படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தக் கதைக்களத்தில் வெளியான படம்தான் ஆயிரத்தில் ஒருவன்.

 கலவையான விமர்சனங்கள்

கலவையான விமர்சனங்கள்

மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்தப் படம் நீண்ட நாட்களாக உருவாகி வந்தது. ஆனால் வெளியான காலகட்டத்தில் ரசிகர்களை கவர இந்தப் படம் தவறிவிட்டது. கலவையான விமர்னங்களையே பெற்றது. தற்போது பொன்னியின் செல்வன் வெளியாகியுள்ள இந்த காலகட்டத்தில் ஆயிரத்தில் ஒருவன் படத்தை கொண்டாட தவறிவிட்டதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

4 பாகங்கள் எடுத்திருப்பேன்

4 பாகங்கள் எடுத்திருப்பேன்

தான் எந்தவொரு படத்தையும் இரண்டாவது பாகத்தை எடுக்கும் நோக்கத்துடன் எடுப்பதில்லை என்று தற்போது கூறியுள்ள செல்வராகவன், ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படம் வெற்றிப் பெற்றிருந்தால், அது இதுவரை 4 பாகங்கள்கூட வெளியாகியிருக்கும் என்றும், அது ரசிகர்களிடம் அங்கீகாரம் பெறாதது சோர்வை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் சூட்டிங்

ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் சூட்டிங்

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திதின் வேலைகள் 2024ம் ஆண்டில் துவங்கவுள்ளதாக தனுஷின் போஸ்டருடன் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பார்த்தாலும் சிறப்பான அனுபவத்தை தந்துவரும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

பார்த்திபன் அப்டேட்

பார்த்திபன் அப்டேட்

இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தை திரையரங்குகளில் பார்த்த நடிகர் பார்த்திபன், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் சூட்டிங் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இதில் சோழ அரசனாக தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். முதல் பாகத்திலேயே தன்னுடைய கேரக்டரில் தனுஷ்தான் நடிக்கவிருந்ததாகவும் ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் தான் நடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

வெளியான காலகட்டம், சிக்கலான திரைக்கதை உள்ளிட்ட காரணங்களால் ஆயிரத்தில் ஒருவன் படம் ரசிகர்களை கவர தவறிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் அடுத்த ஆண்டில் துவங்கவுள்ளது கண்டிப்பாக ரசிகர்களை உற்சாகப்படுத்தும் தகவலாகவே அமைந்துள்ளது. இந்தப் படத்தில் ரசிகர்களை கவரும் எளிமையான திரைக்கதையுடன் செல்வராகவன் அணுகுவார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X