twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தனுஷ் கதையை படமாக்கறது மிகுந்த சவாலா இருந்துச்சு..செல்வராகவனுக்கே இப்படியா?

    |

    சென்னை : நடிகர் தனுஷ் நல்லவராகவும் கெட்டவராகவும் நடித்து வரும் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள படம் நானே வருவேன்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு சகோதரர்கள் இணைந்துள்ள இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    இந்த எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் படத்தின் ரிலீசுக்காக வெயிட்டிங்.

    நானே வருவேன் படக்குழு எடுத்த அதிரடி முடிவு… புலம்பும் தனுஷ் ரசிகர்கள்… என்னய்யா நடக்குது அங்க?நானே வருவேன் படக்குழு எடுத்த அதிரடி முடிவு… புலம்பும் தனுஷ் ரசிகர்கள்… என்னய்யா நடக்குது அங்க?

    நானே வருவேன் படம்

    நானே வருவேன் படம்

    மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் இன்னும் ஒரு நாளில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது தனுஷ் -செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள நானே வருவேன். இந்தப் படத்தில் தனுஷ் ஹீரோவாகவும் வில்லனாகவும் மிரட்டியுள்ளார். இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியாகாத நிலையில், டீசர் மற்றும் ப்ரமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.

    ரசிகர்களை மிரட்டும் கதை

    ரசிகர்களை மிரட்டும் கதை

    கலைப்புலி எஸ் தாணு இந்தப் படத்தை தயாரித்துள்ளார். முன்னதாக தனுஷ் நடிப்பில் அசுரன், கர்ணன் படங்களை தயாரித்துள்ள அவர், தனுஷ் -செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களை மிரட்டும் என்று சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். தனுஷ் இந்தப் படத்தில் வேற லெவல் பர்பார்மென்சை கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    பொன்னியின் செல்வன் படத்துடன் மோதல்

    பொன்னியின் செல்வன் படத்துடன் மோதல்

    படத்தை பார்த்தவுடன் படத்தின் இயக்குநர் செல்வராகவனை உடனடியாக பார்த்து, அடுத்தப்படத்தையும் நாம் இணைந்து செய்கிறோம் என்று தெரிவித்ததாகவும், தனுஷையும் பார்த்து பாராட்டியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். மேலும் பொன்னியின் செல்வன் படத்துடன் மோதுவதற்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    நானே வருவேன் கதையை எழுதிய தனுஷ்

    நானே வருவேன் கதையை எழுதிய தனுஷ்

    தற்போது வெளியாகவுள்ள நானே வருவேன் படத்தின் கதையை எழுதியுள்ளார் தனுஷ். இதனிடையே படத்தின் பிரமோஷனையொட்டி செல்வராகவன் அளித்துள்ள பேட்டியில், இந்தப் படத்தின் கதையை உருவாக்க 6 மாதங்கள் எடுத்துக் கொண்டதாகவும் அந்த ஸ்கிரிப்டை திரையில் கொண்டு வருவது தனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    தனுஷின் வளர்ச்சி குறித்து பெருமிதம்

    தனுஷின் வளர்ச்சி குறித்து பெருமிதம்

    ஆனால் அவரது இந்த வளர்ச்சி தனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். குழந்தையில் இருந்து நடிகராகவும் தற்போது திரைக்கதை ஆசிரியராகவும் அவரது பல வளர்ச்சிகள் தனக்கு வியப்பை ஏற்படுத்துவதாகவும் செல்வராகவன் தெரிவித்துள்ளார். இது தனுஷின் கதை என்பதால் தாங்கள் இருவரும் பல நேரங்களில் பல விவாதங்களை மேற்கொண்டு காட்சிகளை அமைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    முக்கிய கேரக்டரில் செல்வராகவன்

    முக்கிய கேரக்டரில் செல்வராகவன்

    நானே வருவேன் படத்தில் செல்வராகவனும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். படத்தில் அவரது கெட்டப் மிரட்டலாக அமைந்துள்ளது. முன்னதாக தனுஷின் திருச்சிற்றம்பலம் படமும் அதிரிபுதிரியான வெற்றியை கொடுத்துள்ள நிலையில் இந்தப் படத்திற்கான மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    English summary
    Director Selvaraghavan hails Dhanush and says to direct his story makes big challenge to him
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X