ரொம்ப கோவக்காரர் போல.. ஷூட்டிங் ஸ்பாட்டில் தனுஷை ஓங்கி அறைந்த செல்வராகவன்
சென்னை: காதல் கொண்டேன் படத்தின் ஒரு காட்சியில் தனுஷ் ஒழுங்காக நடிக்காததால் அவரை ஓங்கி அறைந்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தனுஷ். ஆரம்பத்தில் அனைவரிடமிருந்தும் மிக மோசமான விமர்சனங்களை பெற்ற தனுஷ் தற்போது கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என கலக்கிவருகிறார். எந்த கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டாலும் நடிப்பில் அதகளம் செய்துகொண்டிருக்கிறார் தனுஷ். சமீபத்தில் அவரது நடிப்பில் வாத்தி படம் வெளியானது. அடுத்ததாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவருகிறார்.

செல்வராகவனே தனுஷுக்கு துணை
முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தை தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாதான் முதலில் இயக்கினார். ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தின் ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கும்போதே தனது மூத்த மகனான செல்வராகவனின் கைகளில் துள்ளுவதோ இளமையையும், தனுஷையும் ஒப்படைத்தார் அவர். கஷ்டத்தில் இருக்கும் தங்களது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற் நோக்கத்தில் செல்வராகவனும், தனுஷும் அந்தப் படத்தில் உழைக்க படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.

தனுஷின் வாழ்க்கையை மாற்றிய காதல் கொண்டேன்
முதல் படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றதும் நம்பிக்கை கொண்ட செல்வராகவன் இரண்டாவது படமாக காதல் கொண்டேன் படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் முதலில் தனுஷுக்கு பதிலாக பிரபுதேவாதான் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் செல்வராகவன் சிறு வயதாக இருந்ததால் அவர் மேல் பிரபுதேவாவுக்கு பெரிதாக நம்பிக்கையில்லை. இதனையடுத்து காதல் கொண்டேன் பட ஹீரோவாக தனுஷையே கமிட்டாக்கினார் செல்வராகவன்.
காதலை அதுவரை எல்லோரும் மென்மையாகவே கையாண்டிருந்த நிலையில் தனுஷை வைத்து காதல் ப்ளஸ் த்ரில்லர் பாணியில் படத்தை இயக்கினார் செல்வா. காதல் கொண்டேன் படத்தில் தனுஷின் நடிப்பைப் பார்த்த பலரும் அவருக்கு பாராட்டு தெரிவிக்க ஆரம்பித்தனர். அதன் பிறகுதான் தனுஷ் கோலிவுட்டில் தனக்கான இடத்தை பிடித்துவிடுவார் என்று பேச்சு எழுந்தது.

மகா நடிகன் தனுஷை செதுக்கிய உளி செல்வராகவன்
காதல் கொண்டேன் படத்தில் ஹீரோவாக நடிக்கும்போது தனுஷுக்கு 17 வயது. அந்த சிறுவயதில் அவ்வளவு பெரிய கேரக்டரை அவ்வளவு அசால்ட்டாக செய்திருக்கிறார் தனுஷ் என இன்றளவும் பலராலும் பேசப்படுகிறது. ஆனால் அதற்கெல்லாம் முழு காரணமும் இயக்குநர் செல்வராகவன்தான். நடிக்கும்போது எத்தனை முறை கண்களை சிமிட்ட வேண்டும் என்பது முதற்கொண்டு செல்வராகவன்தான் சொல்லிக்கொடுப்பாராம். இதனை தனுஷே ஒரு மேடையில் பகிர்ந்திருக்கிறார். அதுமட்டுமின்றி தன்னை உருவாக்கிய உளி செல்வராகவன் எனவும் புகழ்ந்திருக்கிறார்.

காதல் கொண்டேன் படத்தில் சொதப்பிய தனுஷ்
செல்வராகவன் சொல்வதை கேட்டு அப்படியே தனுஷ் நடித்தாலும் சில இடங்களில் சொதப்பவும் செய்தார் தனுஷ். படத்தில் தனுஷை சோனியா அகர்வால் அவரது வீட்டுக்கு அழைத்து செல்லும் காட்சியும், பிரமாண்டமான வீட்டை பார்த்ததும் தனுஷ் கொடுத்திருந்த நடிப்பும் ஆகச்சிறந்தது. ஆனால் அந்த காட்சியை எடுக்கும்போது தனுஷ் சரியாக நடிக்கவில்லை. செல்வராகவன் பல தடவை சொல்லிக்கொடுத்தும் அவரால் செல்வராகவன் நினைத்த நடிப்பை வெளிக்காட்ட முடியாமல் திணறினாராம்.

செல்வராகவனிடம் அறை வாங்கிய தனுஷ்
இதனால் பெரிதும் டென்ஷனான செல்வராகவன் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே வைத்து தனுஷை ஓங்கி அறைந்துவிட்டார். அவர் அறைந்ததில் தனுஷுக்கு ஒட்டப்பட்டிருந்த தாடியெல்லாம் பறந்துவிட்டது. இதனை எதிர்பார்க்காத தனுஷ் அழுதுகொண்டே அங்கிருந்து சென்றிருக்கிறார்
உடனடியாக படத்தின் கேமரா மேன் அரவிந்த் கிருஷ்ணா செல்வராகவனிடம், 'ஏன் இவ்ளோ டென்ஷன். எல்லாம் புதுசுதானே' என சாந்தப்படுத்தியிருக்கிறார். தனுஷை சிலர் சமாதானப்படுத்தும்போது, 'எனக்கு என்ன தெரியும். நான் பாட்டுக்கும் படிச்சிட்டு இருந்தேன். படிச்சிட்டு இருந்தவன கூப்பிட்டு வெச்சு ஏன் இப்டி இம்சை பண்றீங்க' என அழுதுகொண்டே கூறினாராம். அப்படி செல்வராகவனிடம் அறை வாங்கிய தனுஷ்தான் இன்று இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக உருவெடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











