செல்வராகவனையும் விட்டு வைக்காத கொரோனா பாதிப்பு... பாசிட்டிவ் என அறிவிப்பு

சென்னை : திரைத்துறையில் கொரோனா பாதிப்பிற்கு நடிகர், நடிகைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இன்றைய தினம் நடிகர் ஜெயராம், எஸ்வி சேகர் உள்ளிட்டவர்களும் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் இயக்குநரும் நடிகருமான செல்வராகவனும் தான் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் செல்வராகவன்

இயக்குநர் செல்வராகவன்

இந்திய அளவில் பிரபல இயக்குநராக விளங்கி வருகிறார் செல்வராகவன். தற்போது தனது தம்பி தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கி வருகிறார். முன்னதாக இவர்கள் காம்பினேஷனில் புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.

நடிப்பிலும் செல்வராகவன்

நடிப்பிலும் செல்வராகவன்

டைரக்ஷன் மட்டுமின்றி தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் செல்வராகவன். விஜய்யின் பீஸ்ட் படத்தில் அவருக்கு வில்லனாகியுள்ளார். இதில் அரசியல்வாதியாக இவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

சாணி காயிதம் படம்

சாணி காயிதம் படம்

முன்னதாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இருவரும் வித்தியாசமான கெட்டப்புகளில் இந்த படத்தின் போஸ்டர்களில் காணப்படுகின்றனர்.

ஓடிடி ரிலீஸ்

ஓடிடி ரிலீஸ்

அருண் மாதேஸ்வரனின் ராக்கி படம் கொடுத்துள்ள வெற்றியை அடுத்து இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படம் வரும் ஏப்ரலில் ஓடிடியில் நேரடியாக ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

படங்களில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் செல்வராகவன் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது பல தத்துவ கருத்துக்களையும், தன்னுடைய படங்கள் குறித்த கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தான் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

செல்வராகவன் அறிவுரை

செல்வராகவன் அறிவுரை

இன்றைய தினம் தான் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது தெரியவந்துள்ளதாவும் கடந்த 2 -3 நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துக் கொள்ளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கடந்த வாரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இன்றைய தினம் நடிகர் ஜெயராம், எஸ்வி சேகர் உள்ளிட்டவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் செல்வராகவனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X