அந்த பிரச்சனை இருக்கு.. பிறந்தநாள் முடிஞ்ச உடனே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட செல்வராகவன்!

சென்னை: மார்ச் 5ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய இயக்குநர் செல்வராகவன் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

இயக்குநர் செல்வராகவன் அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட புகைப்படங்களை அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

மேலும், 45 வயது நிரம்பியவர்கள், உடலில் ஏதாவது குறைபாடுகள் அல்லது நோய் இருந்தால் உடனடியாக தடுப்பூசியை போட்டுக் கொள்ள தயங்காதீர்கள் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

செல்வராகவன் யூனிவர்ஸ்

செல்வராகவன் யூனிவர்ஸ்

தமிழ் சினிமா இயக்குநர்களில் ஜீனியஸ் இயக்குநர் என்கிற பட்டத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றவர் இயக்குநர் செல்வராகவன். காதல் கொண்டேன் படத்தில் தொடங்கி மார்ச் 5ம் தேதி வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படம் வரை தனது தனி முத்திரையையும் தனது யூனிவர்ஸையும் மிஸ் பண்ணாமல் ரசிகர்களுக்காக கொடுத்து வருகிறார்.

செல்வராகவன் பிறந்தநாள்

செல்வராகவன் பிறந்தநாள்

கடந்த மார்ச் 5ம் தேதி இயக்குநர் செல்வராகவன் தனது பிறந்தநாளை சாணிக் காயிதம் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு இயக்குநர் செல்வராகவனை வாழ்த்தினர். பிறந்தநாள் அன்று செல்வா இயக்கத்தில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.கடந்த மார்ச் 5ம் தேதி இயக்குநர் செல்வராகவன் தனது பிறந்தநாளை சாணிக் காயிதம் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு இயக்குநர் செல்வராகவனை வாழ்த்தினர். பிறந்தநாள் அன்று செல்வா இயக்கத்தில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், இயக்குநர் செல்வராகவன் பிறந்தநாளை முடித்த கையோடு கொரோனா தடுப்பூசியை அப்பல்லோ மருத்துவமனையில் போட்டுக் கொண்டார். அதன் புகைப்படங்களை அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நீரிழிவு பிரச்சனை

நீரிழிவு பிரச்சனை

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்த கீதாஞ்சலி செல்வராகவன் எழுதியுள்ள நீண்ட இன்ஸ்டாகிராம் பதிவில், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசியை அருகில் உள்ள மருத்துவமனைகளில் போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், செல்வாவை போல நீரிழிவு மற்றும் வேறு ஏதாவது உடல் ரீதியான பிரச்சனைகள் இருப்பவர்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X