செலவுகளை திட்டமிடாதீர்கள்.. இது தத்துவம் இல்லை அனுபவம் - செல்வராகவன் ட்வீட்
சென்னை: பணம் கையில் வந்தால்தான் நிஜம் அதுவரை கனவு காணாதீர்கள் என நடிகரும் இயக்குநருமான செல்வராகவன் தெரிவித்திருக்கிறார்.
துள்ளுவதோ இளமை படத்தை இயக்கி முதல் படத்திலேயே ஓரளவு கவனம் பெற்றவர் செல்வராகவன். அதனையடுத்து தனது தம்பியான தனுஷை வைத்து காதல் கொண்டேன் படத்தை இயக்கினார். இந்தப் படம் செல்வராகவன், தனுஷ் ஆகியோரின் வாழ்க்கையையே மாற்றி அமைத்தது.

செல்வராகவன் இயக்கத்தில் கவனம் பெற்ற தனுஷ்
காதல் கொண்டேன் படத்தின் மூலம்தான் தனுஷுக்கு திறமை இருக்கிறது என கோலிவுட் ஒத்துக்கொண்டது. அதனையடுத்து வேறு இயக்குநர்களின் படங்களில் தனுஷ் நடித்தாலும் முழுக்க முழுக்க கமர்ஷியல் ரூட்டிலேயே சென்றுகொண்டிருந்தார். அந்த சமயத்தில்தான் செல்வராகவன் மீண்டும் தனுஷை வைத்து புதுப்பேட்டை படத்தை இயக்கினார். புதுப்பேட்டை திரைப்படம் இன்றுவரை தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. அதேபோல் இந்தப் படத்தை பார்த்த பிறகு தனுஷுக்குள் ஒரு மகாநடிகன் இருக்கிறான் என்பதை அனைவருமே ஒத்துக்கொண்டனர்.

தமிழ் சினிமாவின் ஜீனியஸ் செல்வராகவன்
செல்வராகவனை ரசிகர்கள் ஜீனியஸ் என்றே அழைப்பார்கள். அவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை படங்கள் இன்றுவரை பலரால் கொண்டாடப்பட்டுவருகிறது. மிடில்கிளாஸ் வாழ்க்கையையும், அதற்குள் இருக்கும் நுட்பமான உணர்வுகளையும் ரசிகர்களிடம் கடத்துவதில் தான் ஒரு மாஸ்டர் என பலமுறை நிரூபித்திருக்கிறார் செல்வராகவன்.

செல்வராகவன் செய்த புதுமையான காரியம்
அதேபோல் வரலாற்று படங்களை கொண்டாடும் கலாசாரம் இப்போது பெருகியிருந்தாலும் அதை அப்போதே ஆயிரத்தில் ஒருவன் படம் மூலம் ஆரம்பித்துவைத்தவரும் செல்வராகவனே. குறிப்பாக தமிழ் சினிமாவில் மன்னர் என்றாலே ப்ளாஷ்பேக் அல்லது அந்தக் காலத்தில் இருப்பவர் போல் காட்சிப்படுத்தப்பட்ட நேரத்தில் தற்காலத்தில் கதை போகிறபோக்கில் தற்காலத்தில் ஒரு மன்னர் வசிப்பது போல யோசித்து அதை காட்சிப்படுத்தியவர் செல்வராகவன்.

அதேபோல் வரலாற்று படங்களை கொண்டாடும் கலாசாரம் இப்போது பெருகியிருந்தாலும் அதை அப்போதே ஆயிரத்தில் ஒருவன் படம் மூலம் ஆரம்பித்துவைத்தவரும் செல்வராகவனே. குறிப்பாக தமிழ் சினிமாவில் மன்னர் என்றாலே ப்ளாஷ்பேக் அல்லது அந்தக் காலத்தில் இருப்பவர் போல் காட்சிப்படுத்தப்பட்ட நேரத்தில் தற்காலத்தில் கதை போகிறபோக்கில் தற்காலத்தில் ஒரு மன்னர் வசிப்பது போல யோசித்து அதை காட்சிப்படுத்தியவர் செல்வராகவன்.
தொடர்ந்து படங்கள் இயக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க திடீரென நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் செல்வா. சாணிக்காயிதம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அவர் பீஸ்ட், பகாசூரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது விஷாலின் மார்க் ஆண்டனி படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். ஆனால் அவர் தொடர்ந்து இயக்கத்தில் கவனம் செலுத்த வேண்டுமென்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அவர் கடைசியாக நானே வருவேன் படத்தை இயக்கியிருந்தார். விரைவில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கவிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் தத்துவம் பொழியும் செல்வராகவன்
சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் செல்வராகவன் நிறைய தத்துவங்களை ட்வீட்டாக பதிவு செய்வார். அப்படி அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "பணம் கையில் வந்தால்தான் நிஜம். அதற்கு முன் கனவு காணாதீர்கள். செலவுகளை திட்டமிட வேண்டாம். அனுபவம். தத்துவம் அல்ல " என பதிவிட்டிருக்கிறார். அவரது இந்த ட்வீட்டை ரசிகர்கள் ட்விட்டரில் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











