என்ன தலைவரே.. என்ன ஆச்சு... செல்வராகவன் போட்ட ஒத்த டிவிட்... பதறும் ரசிகர்கள்!

சென்னை: இயக்குநர் செல்வராகவன் பதிவிட்டுள்ள டிவிட்டை பார்த்த ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

தமிழ் சினிமிவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன்.

காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர்.

முன்னணி நடிகர்களுடன்

முன்னணி நடிகர்களுடன்

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனான செல்வராகவன், ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். 7ஜி ரெய்ன்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் , என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

கீர்த்தி சுரேஷுடன் சாணிக் காயிதம்

கீர்த்தி சுரேஷுடன் சாணிக் காயிதம்

இயக்குநராக மட்டுமின்றி எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் உள்ளார் செல்வராகவன். தற்போது சாணிக் காயிதம் என்ற படத்திலும் நடித்து வருகிறார் இயக்குநர் செல்வராகவன். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் சாணிக் காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்கிறார்.

சோனியா அகர்வாலுடன் திருமணம்

சோனியா அகர்வாலுடன் திருமணம்

மேலும் விஜய்யின் பீஸ்ட் படத்திலும் நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இயக்குநர் செல்வராகவன் முதலில் நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

இதனை தொடர்ந்து இருவரும் பிரிந்தனர். பின்னர் தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் செல்வராகவன். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள செல்வராகவன் அவ்வப்போது டிவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்து வருகிறார்.

தனிமையில் இருப்பதே பேரின்பம்

தனிமையில் இருப்பதே பேரின்பம்

அந்த வகையில் தற்போது அவர் பதிவிட்டுள்ள டிவிட் ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது. அவர் பதிவிட்டிருப்பதாவது, இன்னொருவர் இருந்தால்தான் நிம்மதி என்று ஒரு பொழுதும் நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதைப் போல் ஒரு இம்சை எதுவும் இல்லை. தனிமையில் இருப்பதே பேரின்பம். பெரும் நிம்மதி.. என குறிப்பிட்டுள்ளார்.

எதுக்கு மேன் ரெண்டு கல்யாணம்?

எதுக்கு மேன் ரெண்டு கல்யாணம்?

செல்வராகவனின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், அப்புறம் எதுக்கு மேன் ரெண்டு கல்யாணம் பண்ணீங்க என்று கேட்டு வருகின்றனர். மேலும் சிலர் ரெண்டு கல்யாணம் பண்ணுனப்போ குஜாலா இருந்துச்சோ என கலாய்த்து வருகின்றனர்.

தனிமை சில காலம் தான்

தனிமை சில காலம் தான்

மற்றொரு நெட்டிசனான இவர், முதுமை போது உறவுகள் அருமையும் மருத்துவமனையில் நோயின் பிடியில் போது உறவுகள் அருமை புரியும் அது நட்பு தாய் தந்தை மூன்றாவது முன் பின் தெரியாத நபரின் ஆறுதல் வார்த்தை பரிவு கூட எதுவாகினும்... நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறோம் இதில் தனிமை சில காலம் தான் என பதிவிட்டுள்ளார்.

தனிமையே பெரும் நிம்மதி

தனிமையே பெரும் நிம்மதி

மற்றொரு ரசிகரான இவர் நூற்றுக்கு நுறு கரெக்ட் சார் என்றும் தனிமையே பெரும் நிம்மதி மற்றும் நிரந்தரம்.. தனிமைதான் சிறந்தது என்றும் பதிவிட்டுள்ளார்.

தனிமை என்பதே நிரந்தரம்

தனிமை என்பதே நிரந்தரம்

மற்றொரு ரசிகரான இவர், ஜீனியஸ் எப்போதும் தீர்க்கதரிசி.. தனிமை என்பதே நிரந்தரம் !.மற்றவைகளெல்லாம் வரும் போகும்.. அதை காலம் மட்டுமே தீர்மானிக்கும்..

நமக்கு நாமே துணை என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X