சுக்கு நூறாய் போட்ட காதல்… டைரக்டர் செல்வராகவன் வெளிப்படை
சென்னை : இயக்குநர் செல்வராகவன் தொடர்ந்து சிறப்பான படங்களை இயக்கி வருகிறார்.
தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கிவரும் அவர் சாணிக் காயிதம், பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்தும் வருகிறார்.
சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக செயல்பட்டுவரும் அவர் தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

இயக்குநர் செல்வராகவன்
இயக்குநர் செல்வராகவன் இந்திய அளவில் சிறப்பான இயக்குநராக அறியப்படுகிறார். இவரது மயக்கம் என்ன, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றவை. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தன்னை கமிட் செய்துக் கொண்டு அவர் அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகிறார்.

நானே வருவேன் படம்
தற்போது தன்னுடைய தம்பி தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த மாதத்தில் துவங்கியுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில் துவங்கவிருந்த படத்தின் சூட்டிங், தனுஷ், செல்வராகவன் உள்ளிட்டவர்கள் கால்ஷீட் பிரச்சினைகளால் தள்ளிப் போனது.

நடிகர் தனுஷ்
படத்தின் பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை வெளியாகி மிகுந்த வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு இந்தப் படத்தில் தற்போது தனுஷ் நடித்து வருகிறார். இதன் மற்ற நடிகர், நடிகைகளைப் பற்றிய விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை. படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அண்ணன் இயக்கத்தில் தனுஷ்
புதுப்பேட்டை, மயக்கம் என்ன என தனது அண்ணனின் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான படங்கள் ரசிகர்களின் எவர் கிரீன் விருப்ப படங்களாக அமைந்துள்ள நிலையில், தற்போது இந்தப் படம் சிறப்பாக வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

செல்வராகவன் நடிப்பில் கவனம்
மேலும் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் செல்வராகவன். இவரது நடிப்பில் கீர்த்தி சுரேஷ்டன் இணைந்து நடித்துள்ள சாணிக் காயிதம் விரைவில் வெளியாக உள்ளது. இதேபோல முதல் முறையாக நடிகர் விஜய்யின் வில்லனாக பீஸ்ட் படத்திலும் நடித்து வருகிறார் செல்வராகவன். இதில் அரசியல்வாதி கேரக்டரில் அவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்த படங்கள்
இந்த இரண்டு படங்களும் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் செல்வராகவன் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு பதிவுகளையும் கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார். இவரது ட்வீட்களில் காதல், வாழ்க்கை குறித்த வசனங்கள் காணப்படும்.

செல்வராகவன் ட்வீட்
இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மனதை குத்திக் கிழித்து உடைத்து சுக்குநூறாய் போட்ட காதல் ஒன்று இல்லாமல் இருக்காது என்று தெரிவித்துள்ளார். மேலும் சோகத்தை வெளிப்படுத்தும் எமோஜிக்களையும் இணைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











