மத்தவங்க நல்லா இருக்கக்கூடாதுன்னு நினைக்காதீங்க... செல்வராகவன் ஏன் இப்படி சொல்றாரு?
சென்னை : இயக்குநர் செல்வராகவன் தற்போது தனுஷின் படத்தை இயக்கி வருகிறார்.
சமூக வலைதளங்களில் பரபரப்புடன் செயல்பட்டு வருகிறார் செல்வராகவன்.
இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய ட்வீட் ஒன்றை பதிந்துள்ளார்.

இயக்குநர் செல்வராகவன்
இயக்குநர் செல்வராகவன் தனுஷை வைத்து புதுப்பேட்டை, மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரது ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற படங்கள். இந்திய அளவில் தன்னை சிறப்பான இயக்குநராக இவர் நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

நானே வருவேன் படம்
இந்நிலையில் தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சாணிக் காயிதம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்திலும் இணைந்துள்ளார்.

சமூக வலைதளங்களில் பரபர
தொடர்ந்து நடிப்பிலும் டைரக்ஷனிலும் கலக்கிவரும் செல்வராகவன், சமூக வலைதளங்களிலும் மிகவும் பரபரப்புடன் செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது ட்வீட்களை பகிர்ந்து வருகிறார். இவரது மனைவி கீதாஞ்சலியும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்.

புதிய ட்வீட்
இந்நிலையில் தற்போது புதிய ட்வீட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் செல்வராகவன் பகிர்ந்துள்ளார். இன்னொருவர் நன்றாக இருக்கக்கூடாது என்று நினைத்தால், அந்த நொடியே அவர்களுக்கு குழி தோண்டப்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று அந்த ட்வீட்டில் அவர் கூறியுள்ளார்.

பரவலான கருத்துக்கள்
எதை நினைத்து மற்றும் யாரை நினைத்து அவர் இந்த ட்வீட்டை கூறியுள்ளார் என்பது குறித்து ரசிகர்கள் யோசித்து வருகின்றனர். ஆயினும் அவ்வப்போது இத்தகைய பரவலான கருத்துக்களை அவர் பதிவிட்டு வருவதால் இயல்பாக இந்தக் கருத்தை கூறியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











