வேதனை இன்றி விடியல் இல்லை... வாழ்க்கை தத்துவம் சொன்ன செல்வராகவன்
சென்னை : டைரக்டர் செல்வராகவன் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார்.
மேலும் நடிப்பிலும் கவனம் செலுத்தி சாணி காயிதம், பீஸ்ட் படங்களிலும் நடித்து வருகிறார்.
சமூகவலைதளங்களில் அவரை பரபரப்புடன் காண முடிகிறது. அவ்வப்போது வாழ்க்கை குறித்த கருத்துக்களை அவர் வெளியிட்டு வருகிறார்.

இயக்குநர் செல்வராகவன்
இயக்குநர் செல்வராகவன் காதல் கொண்டேன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர். இந்தப் படத்தில் தன்னுடைய தம்பி தனுஷை வைத்து அவர் படம் இயக்கினார். தொடர்ந்து புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே உள்ளிட்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.

நடிகராக செல்வராகவன்
தற்போது தன்னை நடிகராகவும் கோலிவுட்டில் நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்துள்ளார். இதில் வழிப்பறி கொள்ளையராக அவர் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 1980களில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

பீஸ்ட் படத்தில் செல்வராகவன்
இந்நிலையில் விஜய்யின் பீஸ்ட் படத்திலும் இவர் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு அவர் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து சில படங்களில் அவர் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டைரக்ஷனிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
Recommended Video

தனுஷை இயக்கும் செல்வராகவன்
மீண்டும் தனுஷ் மற்றும் செல்வராகவன் நானே வருவேன் படம் மூலம் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் ஆகஸ்டிலேயே திட்டமிடப்பபட்ட நிலையில், கடந்த மாதத்தில் சூட்டிங் துவங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தாணு தயாரிப்பு
படத்தை தாணு தயாரித்து வருகிறார். இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். இதேபோல படத்தின் ஒளிப்பதிவாளராக சாணிக் காயிதம் படத்தில் பணிபுரிந்துள்ள யாமினி யாக்னமூர்த்தி இணைந்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாழ்க்கை குறித்த பதிவு
சமூக வலைதளத்திலும் மிகவும் பிசியாக உள்ளார் செல்வராகவன். அவ்வப்போது வாழ்க்கை தத்துவங்கள் குறித்த இவரது பதிவு கவனம் பெற்று வருகிறது. இந்நிலையில் வாழ்க்கை முடிந்தது, இனிமேல் ஒன்றும் இல்லை என்று நினைக்கும் போதெல்லாம் கடவுள் ஒரு கதவை திறந்து வைக்கிறார் என்றும் வேதனை இன்றி விடியல் இல்லை என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











