குறைகளை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்... பாடம் எடுத்த டைரக்டர் செல்வராகவன்
சென்னை : இயக்குநர் செல்வராகவன் பல்வேறு சிறப்பான படங்களை கொடுத்துள்ளார்.
தற்போது தனுஷூடன் இணைந்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கவுள்ளார்.
சமூக வலைதளங்களில் பரபரப்பாக செயல்பட்டுவரும் செல்வராகவன் அவ்வபோது பல ட்வீட்களை பதிந்து வருகிறார்.

சிறப்பான படங்கள்
இயக்குநர் செல்வராகவன் துள்ளுவதோ இளமை படம் துவங்கி பல்வேறு சிறப்பான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். மேலும் தன்னுடைய தம்பியை வைத்து புதுப்பேட்டை, மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். இந்த படங்கள் சிறப்பான வரவேற்பை பெற்றன.

நானே வருவேன் படம்
இந்நிலையில் தற்போது இவரது இயக்கத்தில் தனுஷ் நானே வருவேன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 20ம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் இணையவுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.
Recommended Video

செல்வராகவன் முடிவு
இதனிடையே இந்த படத்தின் தலைப்பு மிகவும் சாதாரணமாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது இந்த படத்தின் தலைப்பை மாற்றி புதிய தலைப்பை வைக்க செல்வராகவன் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்கு ஊக்கம்
சமூக வலைதளங்களில் செல்வராகவன் மிகவும் பரபரப்புடன் செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு ட்வீட்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது உங்கள் குறைகளையும் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்ற ட்வீட்டை அவர் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











