இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நானே வருவேன்... செல்வராகவன் சொன்ன தகவலை பாருங்க!
சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் நானே வருவேன். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் சிறப்பாக நடித்து வருகிறார். இவரது ஜகமே தந்திரம், அட்ராங்கி ரே மற்றும் மாறன் படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீசாகின. இந்தப் படங்கள் இவருக்கு கலவையான விமர்சனங்களை பெற்றுத் தந்தன. இந்நிலையில் தற்போது இவரது நடிப்பில் அடுத்ததாக திருச்சிற்றம்பலம் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

தமிழ், தெலுங்கில் வாத்தி
இதனிடையே தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் வாத்தி படத்தின் சூட்டிங்கிலும் தனுஷ் கலந்து கொண்டுள்ளார். இதேபோல தன்னுடைய அண்ணன் செல்வராகவனின் இயக்கத்திலும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்தப் படத்தின் போஸ்டர்களை தொடர்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் செல்வராகவன் வெளியிட்டு வருகிறார்.

தனுஷின் புதிய போஸ்டர்
தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில் தனுஷ் சிகரெட்டுடன் காணப்படுகிறார். மேலும் அவர் அந்த போஸ்டரில் மிகவும் இளமையாக உள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் போஸ்டரில் சிகரெட் பிடிப்பது குறித்த எந்தவிதமான எச்சரிக்கை வாசகமும் இடம்பெறாதது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இறுதிக்கட்டத்தில் நானே வருவேன்
இதனிடையே தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக செல்வராகவன் ட்வீட் செய்துள்ளார். வீ கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படம் இறுதிக்கட்ட சூட்டிங்கில் உள்ள நிலையில், விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

நடிப்பிலும் கவனம்
இயக்குநர் செல்வராகவன் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் படம் வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. இதேபோல விஜய்யின் பீஸ்ட் படத்திலும் இவர் நடித்து முடித்துள்ளார். இந்தப் படமும் வரும் ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.


Click it and Unblock the Notifications











