எப்படி வளந்துட்டாங்க.. குழந்தைகளை சமாளிக்க முடியலயாம்.. கடவுளிடம் புலம்பும் செல்வராகவன்!
சென்னை: தமிழ் சினிமாவில் உள்ள டாப் இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவரது சினிமாக்கள் வெளிப்படையாக மனித மனங்களை வெளிச்சம் போட்டு காட்டியது. தனது படைப்பில் எந்த மாதிரியான ஜெனரில் படம் எடுத்தாலும், அதனுள் மனத மனதிற்குள் இருக்கும் அழுக்கை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டிவிடுவார். இவரது இயக்கத்தில் வெளியான படங்களுக்கு இன்றுவரை வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக படங்கள் இயக்குவதில் இருந்து நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். இதுமட்டும் இல்லாமல், தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது மனதில் தோன்றும் விஷயங்களைப் பகிர்ந்து வருவார். இந்நிலையில் செல்வராகவன் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

செல்வராகவன் சிறந்த இயக்குநர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் நடித்த படங்களில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களும் அதற்காக அவரது நடிப்பையும் பார்த்து ரசிகர்கள் பாராட்டினர். அண்மையில் இவர் அவரது தம்பியின் இயக்கத்தில் அதாவது நடிகர் தனுஷ் தானே எழுதி இயக்கி நடித்த அவரது 50வது படத்திலும், செல்வராகவன் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவரது நடிப்பு அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.

ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, தனது சமூக வலைதளப் பக்கங்களில் தனது ரசிகர்களுக்கு எதாவது மெசேஜ் தனது சொந்த அனுபவத்தில் இருந்து கூறி வருகின்றார். அதேபோல் சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகளுக்கும் தனது எண்ணத்தினை வெளிப்படுத்தி வருபவர். அண்மையில் கூட அரசுப் பள்ளியில் நடைபெற்ற, சர்ச்சைக்குரிய பேச்சாளரின் நடவடிக்கையை கண்டித்து பதிவிட்டிருந்தார். அதேபோல் தொடர்ந்து பல வாழ்வியல் தத்துவங்களை பகிர்ந்து வருகின்றார்.

ஆயிரத்தில் ஒருவன்: சில வாரங்களுக்கு முன்னர் கூட, தனது இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தினைக் கொண்டாடாத ரசிகர்களை விமர்சித்து வீடியோ பதிவு ஒன்றைப் பகிர்ந்தார். அதில், " படத்தில் உழைத்த கார்த்தி, ஆன்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் சார் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமலேயே போய்விட்டதே என இப்போதும் வலி உள்ளது.

குறிப்பாக, கேமராமேன் ராம்ஜிக்கு யாருமே அங்கீகாரம் கொடுக்கவில்லை. அதேபோல் இசை அமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் குமார், அவர் தூங்கவே இல்லை, இந்த படத்தோட வாழ்ந்தார் என்றுதான் கூறவேண்டும். இவர்களுக்கு யாருமே ஒரு அங்கீகாரம் கொடுக்கவில்லையே என்று இன்று வரை அழுதுகொண்டே இருக்கிறேன்" என பதிவிட்டிருந்தார்.

புது போஸ்ட்: இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி. இவர்களுக்கு லீலாவதி என்ற மகள் உள்ளார். அதேபோல், செல்வராகவனுக்கு தனுஷ், கார்த்திகா தேவி, விமலா கீதா என்ற சகோதர சகோதரிகள் உள்ளனர். தனது பெண் குழந்தை, தனது சகோதரிகளின் குழந்தைகள் என அனைவரும் சண்டேவில் மிகவும் ஜாலியாக வீட்டில் ஒன்றாக நேரம் செலவழித்திருப்பார்கள் போல. இவர்கள் அனைவரும் வீட்டில் விளையாடிக்கொண்டு இருக்கும் புகைப்படத்தினைப் பகிர்ந்து, 'கடவுளே சிவா.. எனக்கு சக்தி கொடு.. ஓம் நமச்சிவாயா' என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











