7G Rainbow colony 2: செப்டம்பர் முதல் வாரத்தில் துவங்கும் 7ஜி ரெயின்போ காலனி 2: ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டில் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் 7ஜி ரெயின்போ காலனி.

காதல் படமாக உருவான இந்தப் படத்திற்கு இசையால் உயிரூட்டியிருந்தார் யுவன் சங்கர் ராஜா.

இந்நிலையில் இந்தப் படத்தில் இரண்டாவது பாகம் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. சூட்டிங் குறித்த அப்டேட்டும் வெளியாகியுள்ளது.

Director Selvaraghavans 7G Rainbow colony 2 movie shooting update here

7ஜி ரெயின்போ காலனி 2 சூட்டிங் அப்டேட்: நடிகர் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டில் வெளியான படம் ரஜி ரெயின்போ காலனி. செல்வராகவனுக்கு சிறப்பான இயக்குநர் அந்தஸ்து கொடுத்தப் படங்களில் இந்தப் படமும் முக்கியமானது. காதல் படமாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். குறிப்பாக படத்தின் க்ளைமாக்ஸ் நெஞ்சை உருக்குவதாக அமைந்தது.

இந்தப் படத்திற்கு தன்னுடைய இசையால் உயிரூட்டியிருந்தார் யுவன் சங்கர் ராஜா. குறிப்பாக ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் ஜோடி இந்தப் படத்தில் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் ஏறக்குறைய 20 ஆண்டுகள் கழித்து தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளது. செல்வராகவனே இயக்கும் இந்தப் படத்தில் ரவி கிருஷ்ணா ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

படத்தில் ஹீரோயினாக அனஸ்வரா ராஜன் கமிட்டாகியுள்ளார். படத்தின் சூட்டிங் குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது செப்டம்பர் முதல் வாரத்தில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக படக்குழு தரப்பில் தற்போது அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகன் ரவி கிருஷ்ணா, தொடர்ந்து அதிகமான படங்களில் நடிக்காத நிலையில், தற்போது ஹீரோவாக மீண்டும் களமிறங்கவுள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியானது நானே வருவேன். இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்தப் படத்தை தொடர்ந்து தனது இயக்கத்தில் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை அவர் மேற்கொள்ளவில்லை. அவரது இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் 2 படமும் லைன் அப்பில் உள்ளது. இந்நிலையில் இந்தப் படம் விரைவில் துவங்கவுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இயக்கத்தில் மட்டுமில்லாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் செல்வராகவன். அவரது நடிப்பில் அடுத்தடுத்து சாணி காயிதம், பீஸ்ட் படங்கள் வெளியாகி கவனத்தை பெற்றது. இந்நிலையில் தற்போது தன்னுடைய தம்பி தனுஷ் இயக்கத்தில் டி50 படத்தில் இணைந்துள்ளார் செல்வராகவன். கேங்ஸ்டர் படமாக உருவாகிவரும் இந்தப் படத்தில் அவருக்கு சிறப்பான கேரக்டர் அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X