பிரபுதேவாவின் ஜாலியோ ஜிம்கானா.. பிரஸ் மீட்டில் நடந்த உச்சக்கட்ட சண்டை.. வெளியேறிய இயக்குநர்
சென்னை: பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் ஜாலியோ ஜிம்கானா படத்தை சக்தி சிதம்பரம் இயக்கியிருக்கிறார். இதில் மடோனா, அபிராமி, யோகிபாபு, ரோபோ சங்கர் என ஏராளமானோர் நடித்திருக்கின்றனர். நவம்பர் 22ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது. இதற்கிடையே படத்திலிருந்து போலீஸ்காரன கட்டிக்கிட்டா என்ற பாடல் வெளியாகி சர்ச்சைகளையும், பிரபல்யத்தையும் ஒருசேர கண்டது. அந்தப் பாடலை எழுதியது பத்திரிகையாளரும், பாடலாசிரியருமான ஜெகன் கவிராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அளவில் பிரபலமான நடன அமைப்பாளராக இருப்பவர் பிரபுதேவா. ஹீரோவாகவும் தனது தடத்தை பதித்திருக்கும் அவர் இப்போது சக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஜாலியோ ஜிம்கானா படத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே இவர்கள் இணைந்து சார்லி சாப்ளின் படத்தை கொடுத்திருக்கிறார்கள். இதன் காரணமாக இந்தப் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதில் பிரபுதேவாவுடன் அபிராமி, மடோனா, ரோபோ சங்கர், யோகிபாபு என பலர் நடித்திருக்கிறார்கள். Trans India நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது.

ஃபேமஸான பாடல்: படமானது நவம்பர் 22ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க படத்தில் இடம்பெற்ற போலீஸ்காரன கட்டிக்கிட்டா என்ற பாடல் அண்மையில் வெளியாகி படு ஃபேமஸ் ஆனது. பாடல் வரிகள் முழுக்க முழுக்க டபுள் மீனிங்கில் இருந்தது சர்ச்சையையும் சந்தித்தது. பாடலுக்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைக்க; நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் எழுதியது?: அந்தப் பாடல் டபுள் மீனிங் மட்டுமின்றி இன்னொரு விஷயத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது பத்திரிகையாளரும், ஏற்கனவே ஜீரக பிரியாணி உள்ளிட்ட பாடல்களை எழுதி பிரபலமானவருமான பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ்தான் இந்தப் பாடலை எழுதியிருந்தார். படத்தின் போஸ்டரிலும் பாடல்கள் ஜெகன் கவிராஜ் என்றே இருந்தது. ஆனால் பாடலின் லிரிக்கல் வீடியோவில் பாடல் வரிகள் சக்தி சிதம்பரம் என்று இருந்தது. இதனைக் கண்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
பத்திரிகையாளர் சந்திப்பு: ஆனால் இந்த விஷயத்தை பற்றி பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் அமைதியே காத்துவந்தார். இந்நிலையில் இன்று ஜாலியோ ஜிம்கானா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர்கள், இந்தப் பாடல் விவகாரம் பற்றி காட்டமாகவே இயக்குநர் சக்தியிடம் முன்வைத்தனர். ஆனால் அவரோ எதற்கும் பதிலளிக்காமல் பாதியிலேயே பத்திரிகையாளர் சந்திப்பிலிருந்து வெளியேறினார். அது மேற்கொண்டு அங்கிருந்தவர்களை சூடாக்கியது.
ஜெகன் கவிராஜ் விளக்கம்: இதனையடுத்து இந்தப் பாடல் பற்றிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் வலியுறுத்த; பாடல் எழுதிய ஜெகன் கவிராஜ் மேடை ஏறினார். அப்போது பேசிய அவர், "நான் ட்ரான்ஸ் இந்தியா நிறுவனத்தில் ஆஃபிஸ் பாயாக சேர்ந்தேன். இப்போது அந்த கம்பெனியில் தயாரிப்பு நிர்வாகியாக இருக்கிறேன். இந்தப் படத்திலும் நான் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினேன். முதலில் இந்தப் பாடல் எப்படி உருவானது என்று சொல்லிவிடுகிறேன்.
வேண்டுமென்றே போடவில்லை: இந்தப் பாடல் ஜானரில் ஏற்கனவே சில்க் ஸ்மிதாவுக்கு ஒரு பாடல் வந்திருக்கிறது. அதேபோல் மலையாளத்திலும் வந்திருக்கிறது. அதை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் இந்தப் பாடலை உருவாக்கினோம். நான் இந்தப் பாடலை எழுதினேன். நேரடியாக இசையமைப்பாளருக்கு வரிகளை நான் அனுப்பமாட்டேன். இயக்குநர் வழியாகத்தான் வரிகள் இசையமைப்பாளரிடம் போகும். அப்படி நான் அனுப்பியது என்னிடம் இருக்கிறது.
என்ன பிரச்னை: இந்தப் படத்தை 8 கோடி ரூபாய் பட்ஜெட் என்றுதான் ஆரம்பித்தோம். ஆனால் 15 கோடி ரூபாய்வரைக்கும் செலவு ஆனது. இதுதொடர்பாக எங்கள் தயாரிப்பாளரிடம் நான் சில விஷயங்களை சொன்னேன். அது இயக்குநர் சக்தி சிதம்பரத்தை கோபப்படுத்திவிட்ட்து. அப்போதே அவர் தயாரிப்பாளரிடம், 'பாடலில் ஜெகனின் பெயரை போடமாட்டேன்' என்று சொல்லிவிட்டார். எங்கள் தயாரிப்பாளரோ வளர்ந்து வரும் பையன் ஜெகன்; அவர் பெயரை போடுங்கள் என்று வேண்டுகோள் வைத்தார். ஆனால் அவர் கேட்கவில்லை. இத்தனை காலமும் நான் ஏன் அமைதியக இருந்தேன் என்றால் இந்தப் படம் நல்லபடியாக வெளியாக வேண்டும் என்பதால்தான்" என்றார்.


Click it and Unblock the Notifications











