டெடி படத்தில் அந்த கரடி பொம்மையாக நடித்தது இவர் தான்.. போட்டோவுடன் ரகசியத்தை சொன்ன இயக்குநர்!
சென்னை: ஆர்யா, சாயிஷா நடிப்பில் வெளியான டெடி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
உயிருடன் கரடி பொம்மை பேசுவதையும், நடப்பதையும் பார்த்த ரசிகர்கள் சிஜி மாதிரி தெரியலையே, ரொம்ப தத்ரூபமா இருக்கே? என கெஸ் செய்தனர்.
இந்நிலையில், கரடி பொம்மைக்குள் ஒளிந்து கொண்டு நடித்து அசத்திய நடிகர் இவர் தான் என இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன் ரகசியத்தை அம்பலப்படுத்தி உள்ளார்.

சக்தி செளந்தர் ராஜன் இயக்கத்தில்
நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் என ஹாலிவுட் ஸ்டைல் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்ப புதுமையான ஜானர்களில் புகுந்து விளையாடி வருகிறார் இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன். டெட் என ஏற்கனவே ஹாலிவுட்டில் வெளியான படத்தை போல தற்போது டெடி என்கிற படத்தை மருத்துவ துறையில் நடக்கும் ஊழலுடன் கலந்து கட்டி கொடுத்து அசத்தி உள்ளார்.

ஃபேவரைட்டான டெடி
ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சாயிஷா இந்த படத்தில் ஸ்ரீ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலேயே அவரை கோமாவுக்கு அனுப்பி விட்டு அவரது ஆவியை டெடிக்குள் செலுத்தி படம் முழுக்க டெடியின் அட்டகாசத்தை காட்டியிருப்பார் இயக்குநர். டெடி பேசுவதையும் நடப்பதையும், ஃபீல் பண்ணுவதையும் பார்த்த பலரும் அதன் மீது உடனடியாக காதலில் விழுந்து விட்டனர்.

கருணாகரன் மகள்
சமீபத்தில் டெடி படத்தில் நடித்த காமெடி நடிகர் கருணாகரன் மகள் டெடியை டீகோட் செய்கிறேன் என ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், டெடி பொம்மைக்குள் ஒரு சிறுவனோ அல்லது சிறுமியோ உள்ளே இருந்து நடித்தனர் என்றார். கருணாகரன் பெண்ணல்ல பையன் என்று விளக்கம் கொடுத்து இருந்தார்.

இவரு தான் நம்ம டெடி
இந்நிலையில், தற்போது இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன் மற்றும் நடிகர் ஆர்யா தங்கள் ட்விட்டர் பக்கத்தில் டெடி பொம்மை பாடி சூட் அணிந்து கொண்டு நடித்த நடிகர் கோகுலை அறிமுகப்படுத்தி உள்ளனர். டெடியின் மேனரிசம் எல்லாம் இவருடையது தான். டெடியின் தலை 3டி மாடலில் உருவாக்கப்பட்டது. நெக்ஸ்ட் ஜென் மீடியாவுடன் இணைந்து இந்த படத்திற்கான சிஜி பணிகள் நடைபெற்றது என்றும் இயக்குநர் கூறியுள்ளார்.

குவிகிறது பாராட்டு
டெடியாக நடித்தது தியேட்டர் கலைஞர் கோகுல் தான் என்பதை அறிந்த ரசிகர்கள், நடிகர் கோகுலை வெகுவாக பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில், அடுத்தடுத்து உங்களுக்கு நல்ல நல்ல பட வாய்ப்புகள் அமைய வேண்டும் என்றும் வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











