இப்போ நீ பேசுற.. டெடி படம் பார்த்துட்டு சிங்கிள்ஸ் இப்படியெல்லாம் டார்ச்சர் பண்றாங்களாம்.. மீம்ஸ்!

சென்னை: இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடிப்பில் வெளியான டெடி திரைப்படம் குழந்தைகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ள டெடி படத்தை குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோர்களும் கண்டு களித்து வருகின்றனர்.

இந்நிலையில், டெடி படம் தொடர்பான மீம்களும் ஒரு பக்கம் சமூக வலைதளத்தில் செம சேட்டை செய்து வருகின்றன. இதில் சில மீம்களை இயக்குநர் சக்தி செளந்தர் ராஜனே ஷேர் செய்திருப்பது தான் ஹைலைட்.

எந்தன் நண்பியே

எந்தன் நண்பியே

டெடி படத்தை பார்த்து விட்டு ஏகப்பட்ட முரட்டு சிங்கிள்களும் இது போன்ற ஒரு தோழி கிடைக்க மாட்டார்களா? என்கிற ஏக்கத்தோடு எந்தன் நண்பியே பாடலை ஸ்டேட்டஸ்களாக வைத்து வருகின்றனர். இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா, சதீஷ், கருணாகரன் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி நடிப்பில் வெளியான டெடி திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

என்ன குளிருதா

என்ன குளிருதா

வீட்டில் இதுவரை சும்மா ஷோகேஸ் மீது வைக்கப்பட்டிருந்த டெடி பொம்மைகளை எடுத்துக் கொண்டு இளம் பெண்கள், அதன் கூடவே படுத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர் என்பதை கலாய்க்கும் விதமாக இந்த மீமை மீம் கிரியேட்டர்கள் உருவாக்கி உள்ளனர். என்ன செல்லம் குளிருதா என டெடிக்கு போர்த்தி விடும் பெண்களை பார்த்து, என்ன டெடி படம் பார்த்த எஃபெக்ட்டா என்பது போல அமைந்துள்ளது இந்த மீம்.

பெரிய கரடி பொம்மை

பெரிய கரடி பொம்மை

குழந்தைகள் மட்டுமின்றி 90ஸ் கிட்ஸ்களும் மிகப்பெரிய கரடி பொம்மைகளுடன் போட்டோக்களாக எடுத்துப் போட்டு, டெடி படத்தை பாராட்டி வருகின்றனர். இது போல இன்னும் நிறைய ரியாலிஸ்ட்டிக்கான படங்களை எடுங்க என்றும் இயக்குநர் சக்தி செளந்தர் ராஜனுக்கு நம்பிக்கை அளித்து வருகின்றனர்.

வியாபாரம் ஜோர்

வியாபாரம் ஜோர்

ஆர்யாவின் டெடி படம் வெளியான பிறகு டெடி கரடி பொம்மைகளின் விற்பனையும் சூடு பிடித்துள்ளதாகவும், குழந்தைகள் தங்களுக்கு ஆளுயர டெடி பொம்மைகளை வாங்கிக் கொடுக்க பெற்றோர்களை நச்சரித்து வருவதாகவும் ஏகப்பட்ட கமெண்ட்களும் ஆர்யாவின் டெடி படத்திற்கு பாராட்டுக்களாக குவிந்து வருகின்றன.

இப்போ நீ பேசுற

இப்போ நீ பேசுற

ஏகப்பட்ட டெடி மீம்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்த ஒரு மீமை இயக்குநர் சக்தி செளந்தர் ராஜனே ரொம்ப லைக் பண்ணி தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். டெடி படத்தை பார்த்த பிறகு சிங்கிள் பசங்க, இப்போ நீ பேசுற என குத்துவது போல வடிவேலுவை வைத்து போட்டுள்ள மீம் நிச்சயம் வேற லெவல்.

More from Filmibeat

Read more about: teddy டெடி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X