ஏப்ரலில் வெளியாகிறதா இந்தியன் 2.. விரைவில் தொடங்குகிறது கமல்ஹாசனின் தக் லைஃப் படப்பிடிப்பு?

சென்னை: இந்தியன் 2 படத்தில் நடிகர் கமலஹாசனின் எஞ்சிய காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டே இருப்பதால், படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் நொந்துப்போனார்கள். படம் தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா உட்பட பலர் நடித்துள்ளனர்.

Director shankar and kamal haasans indian 2 shooting end

லைகா, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முக்கியமான காட்சிகள் தைவானின் தைபே, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரங்களில் படமாக்கப்பட்டன. இப்படத்துக்கான டப்பிங் மற்றும் எடிட்டிங் பணிகள் நடைபெற்று வந்தது. அண்மையில் கமல் டப்பிங் பேசும் வீடியோவை படக்குழுவெளியிட்டு இருந்த நிலையில், படத்தின் மேலும், சில காட்சிகள் எடுக்க வேண்டி இருப்பதாக கூறப்பட்டது.

இந்தியன் 3 வருமா: ஆனால் எடுக்கப்பட்ட மொத்த காட்சிகளை ஓட்டிப் பார்த்தால் ரன்னிங் டைம் 5.30 மணி நேரம் ஓடுகிறது. இதற்கு பல கோடிகளை கொட்டி தயாரிப்பு நிறுவனம் தயாரித்ததால் எந்த காட்சியை வெட்டுவது என தெரியாமல் படக்குழு திணறி வருவதாக கூறப்பட்டது. இன்னும் 30 நிமிஷத்திற்கான படப்பிடிப்பு மட்டும் எடுத்தால் போதும் என்பதால், அதற்கான படப்பிடிப்பை தொடங்கும் வேலையில் படக்குழு இறங்கி உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது இந்தியன் 2 படத்தின் கமல்ஹாசன் நடிக்க இருந்த மொத்த காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. படம் பொங்களுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,ஏப்ரல் மாதம் கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கமஹாசனின் 234 படம்: இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசனின் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் கமல் நடிக்க உள்ளார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். தக் லைப் படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் சென்னையில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

எச் வினோத் இயக்கத்தில்: தக் லைப் பட வேலைகளை முடித்த பிறகுதான் கமலின் 233வது படத்தின் வேலைகள் தொடங்கப்பட உள்ளது. இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், ஆர் மகேந்திரன் உடன் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்காக கமல்ஹாசன் கதை வடிவமைத்துள்ளார். இயக்குநர் எச் வினோத், எழுதி, இயக்கவுள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்சின் 52 ஆவது படமாக இது உருவாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X