Game Changer: வேகம் காட்டும் ஷங்கர்.. கேம் சேஞ்சர் குறித்து வெளியான முக்கிய அப்டேட்!
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்துவரும் கேம் சேஞ்சர் திரைப்படம் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில், தற்போது படம் குறித்த முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் ஊழலுக்கு எதிரான கதைக்களத்தை கொண்டு வெளியான இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து நீண்ட ஆண்டுகள் கழித்து இந்தியன் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் முடிவு செய்தார். அதற்காக நடிகர் கமலஹாசன் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.

இந்தியன் 2: இந்தியன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து, லைகா நிறுவனத்துடனான பிரச்சனை என இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பல ஆண்டுகளாக தள்ளிப்போய் கொண்டே இருந்தது. அதன் பிறகு ஏற்பட்ட சுமூகமான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. இப்படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், படம் எதிர்பார்த்தபடி வெளியாகவில்லை.
ராம் சரணின் கேம் சேஞ்சர்: இந்தியன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பாதியில் நின்ற போது இயக்குனர் ஷங்கர் நடிகர் ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் படத்தை இயக்கத் தொடங்கினார். இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். கியாரா அத்வானி படத்தில் நாயகி நடித்துள்ளார். மேலும் நடிகர் சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, சுனில், ஜெயராம், அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் முதல் முறையாக ஷங்கர் இயக்கும் படத்துக்கு இசையமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகி வருகிறது.
கடுப்பான பேன்ஸ்: கேம் சேஞ்சர் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படம், 2021 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. 3 வருடங்கள் கழிந்தும், படம் குறித்த எந்த அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை. இதனால், கோபமான ராம் சரண் ரசிகர்கள் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜுக்கு எதிராக எக்ஸ் தளத்தில் ஹேஷ் டேக் ட்ரெண்ட் செய்து வந்தனர்.
முதல் சிங்கிள்: இந்நிலையில், கேம் சேஞ்சர் படம் குறித்த அப்டேட் குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மார்ச் 27-ந் தேதி நடிகர் ராம்சரணின் பிறந்தநாளன்று கேம் சேஞ்சர் திரைப்படத்தின் மாஸான அப்டேட்டை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அநேகமாக அது கேம் சேஞ்சர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டாக இருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











