ஷங்கர் படத்தை நிராகரித்த கார்த்தி.. நவரச நாயகனின் ஈ.கோவை டச் பண்ணாமல் இருக்க ஷங்கர் பார்த்த வேலை!
சென்னை: நவரச நாயகன் கார்த்திக் குறித்த பேச்சுக்கள் தற்போது திரைத்துறையில் அதிகம் உலா வந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக அவர் கெரியரின் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் எப்படி எல்லாம் நடந்து கொண்டார் என்ற தகவல்கள் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறது. இப்படியான நிலையில் கார்த்தி, இயக்குநர் ஷங்கர் படத்தில் நடிக்க கேட்டபோது நடைபெற்ற சம்பவம் குறித்து இயக்குநர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் கார்த்தி தனது கெரியரின் உச்சத்தில் இருக்கும் போது யார் வந்து தேதி கேட்டாலும், அவர்களுக்கு தேதி கொடுத்துவிடுவார் என்றும், அப்போதே தனது சம்பளத்தில் கணிசமான அளவு முன் தொகையை வாங்கிவிடுவார் என்றும் கூறுப்படுகிறது. இது திரைத்துறையில் அனைவரும் செய்வதுதான். ஆனால் அதன் பின்னர் அவர் கொடுத்த தேதியில் வந்து நடித்துக் கொடுக்க மாட்டாராம். அப்படியே படப்பிடிப்பு தளத்திற்கு வந்தாலும், மிகவும் தாமதமாகத்தான் படப்பிடிப்புக்கு வருவாராம் என்று எல்லாம் பிரபலங்கள் சொன்ன பேச்சுக்கள் எல்லாம் பெரிய அதிர்ச்சியை கிளப்பியது.

இது மட்டும் இல்லாமல், அட்வான்ஸ் கொடுத்த பின்னர் தயாரிப்பாளருக்கும் அவருக்கும் இடையிலோ, இயக்குநருக்கும் அவருக்கும் இடையிலோ கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, படத்தை டிராப் செய்யலாம் என்று முடிவெடுத்தால், அட்வான்ஸ் பணத்தை திருப்பிக் கொடுக்க மாட்டார் என்று எல்லாம் குற்றச்சாட்டுகள் இருந்தது என்று பேச்சுகள் அடிபட்டது பெரும் ஷாக் கொடுத்துள்ளது.
ஷங்கர்: இப்படி இருக்கும்போது, இயக்குநர் ஷங்கர் படத்தில் நடிக்க கார்த்திக்கிடம் கேட்ட போது அவரது ஈ.கோவை டச் செய்யாமல் இருக்க ஷங்கர் எப்படி நடந்து கொண்டார் என்பதை இயக்குநர் மற்றும் நடிகருமான வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். அதாவது, ஐ படத்தில் கார்த்திக் தான் நடிக்க வேண்டி இருந்தது. ஷங்கர் சார் என்னிடத்தில் கார்த்திக்கிடம் கேட்டுச் சொல்ல சொன்னார். நானும் நடிகர் கார்த்திக்கிடம் இது தொடர்பாக சொல்லி விட்டு, நீங்களும் பெரிய கதாநாயகன், அவரும் பெரிய இயக்குநர், இருவரும் உங்கள் அலுவலங்களில் சந்தித்துக் கொள்வதைக் காட்டிலும் பொதுவான இடத்தில் சந்தித்துக் கொள்ளுங்கள் என்று கார்த்திக்கிடம் கூறிவிட்டேன். கார்த்திக், உடனே எனக்கு ஷங்கர் அலுவலகத்திற்கு வருவதில் எந்த பிரச்னையும் இல்லை என்று கூறினார். ஆனால் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

ஈ.கோ: அதன் பின்னர் இயக்குநர் ஷங்கரைப் பார்த்து விஷயத்தைச் சொன்னபோது, நான் பார்த்து வளர்ந்த கதாநாயகன் அவர், நான் அவர் அலுவலகத்திற்கு வருகிறேன் என்று சொல்லி அலுவலகத்திற்குச் சென்றார். கதை கேட்ட பின்னர் கார்த்திக் அதில் நடிக்க மறுத்துவிட்டார்" என்று கூறினார். இந்த தகவலை இயக்குநர் வெங்கடேஷ் பகிர்ந்து கொண்ட பின்னர் பலரும் கார்த்திக்கின் ஈ.கோவை டச் செய்யாமல் இயக்குநர் ஷங்கர் காய் நகர்த்தி உள்ளாரே என்று பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











