ஒருவேளை சாப்பாட்டுகே கஷ்டம்.. இயக்குனர் சங்கர் அசிஸ்டெண்டின் பரிதாப நிலை!

சென்னை : பிரம்மாண்ட இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த செல்வேந்திரன் ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் 90க்கு பிறகு அறிமுகமான இயக்குநர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குநர் ஷங்கர்.

பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த இயக்குநர் ஷங்கர், படத்துக்குப் படம் பிரம்மாண்டத்தை காட்டி வருகிறார்.

இயக்குநர் ஷங்கர்

இயக்குநர் ஷங்கர்

ஆக்ஷன் கிங் ஆர்ஜூன் நடித்த ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஷங்கர். இவர் இதுவரை ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், முதல்வன்,பாய்ஸ், எந்திரன் என இதுவரை 13 படங்களை இயக்கி உள்ளார். அவற்றில் ஒரு சில படங்கள் மட்டுமே வணிகரீதியாகத் தோல்வி அடைந்தன. இவரின் படங்களில் பெரும்பாலானவை சமூக விழிப்புணர்வு படங்களாகவே இருக்கும்.

2018ம் ஆண்டு 2.0

2018ம் ஆண்டு 2.0

ஷங்கரின் இயக்கத்தில் கடைசியாக 2.0 திரைப்படம் வெளியானது. எந்திரன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2.0 திரைப்படம் உருவாக்கப்பட்டது. இதில் எமிஜாக்சன், அக்ஷய் குமார் ஆகியோர் நடித்திருந்தனர். செல்போனால் ஏற்படும் பாதிப்பு குறித்து அழகாக எடுத்துக்கூறியிருந்தார். 2018ம் தேதி வெளியான இத்திரைப்படத்திற்கு பிறகு இன்னும் எந்த படத்தையும் அவர் வெளியிட வில்லை.

இந்தியன் 2

இந்தியன் 2

தற்போது ஷங்கர் இந்தியன் 2, ராம்சரணின் 15வது படமான ஆர்சி 15 திரைப்படம் என ஒரே நேரத்தில் இரண்டு படத்தை இயக்கி வருகிறார். இதில் ஆர்சி15 படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியன் 2 திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முடிவில் இருப்பதால் ஒவ்வொரு நாளும் இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பாப்பு அதிகரித்து வருகிறது.

ஷங்கரின் உதவி இயக்குநர்

ஷங்கரின் உதவி இயக்குநர்

இந்நிலையில்,இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து காதலன், ஜீன்ஸ், இந்தியன் படங்களில் பணியாற்றிய செல்வேந்திரன் அடுத்த வேளை உணவுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார். நடிகை லட்சுமி ராயை வைத்து ஒரு காதலன் ஒரு காதலி படத்தை இயக்கிய இவர், இயக்குநர் ஆகவேண்டும் என்ற ஆசையில் ஊரைவிட்டு ஓடிவந்துள்ளார்.

சாப்பாட்டுக்கே வழியின்றி

சாப்பாட்டுக்கே வழியின்றி

இவர் இயக்கிய முதல் படம் தோல்வி அடைந்தால்,வாழ்க்கையை வெறுத்து அலைந்து கொண்டு இருக்கிறார். ஷங்கரைப் பார்த்து உதவி கேட்க மனம் வராததால், சாப்பாட்டுக்கே வழியின்றி பட்டினியுடன் வாய்ப்பை தேடி அலைந்து வருகிறார். எப்படியாவது ஒரு படத்தை இயக்கி சாதித்த பிறகே சொந்த ஊர் சென்ற பிடிவாதத்தில் இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X