இந்தியன் 2 தாமதத்திற்கு லைகா தான் காரணம்...ஷங்கர் பகீர் குற்றச்சாட்டு

சென்னை : ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிறுத்தப்பட்டது. அதற்கு பிறகு கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் படப்பிடிப்பு இதுவரை மீண்டும் தொடங்கப்படவில்லை. இதனால் இப்படத்தில் கமிட் ஆகி இருந்த நடிகர், நடிகைகள் மற்ற படங்களில் நடிக்க சென்று விட்டனர்.

ஹீரோ கமலும் அரசியல் வேலைகளில் பிசியாக இருந்ததால், இயக்குனர் ஷங்கரும் தனது அடுத்த 2 படங்கள் பற்றிய அறிவிப்புக்களை வெளியிட்டார். அதுவரை அமைதி காத்த இந்தியன் 2 படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம், ஷங்கரின் அறிவிப்பால் கடுப்பாகி, கோர்ட்டில் ஷங்கர் மீது வழக்கு தொடர்ந்தது.

தோல்வி அடைந்த சமரச பேச்சு

தோல்வி அடைந்த சமரச பேச்சு

இந்தியன் 2 படத்தை முடிக்கும் வரை மற்ற படங்களை ஷங்கர் இயக்க தடை விதிக்க வேண்டும் என லைகா தனது மனுவில் கேட்டிருந்தது. இதைத் தொடர்ந்து 2 மாதங்களில் இந்தியன் 2 படப்பிடிப்பை துவங்க உள்ளதாக ஷங்கர் கோர்ட்டில் கூறினார். ஆனால் இதனை ஏற்க லைகா மறுத்து விட்டது. கோர்ட் அறிவுறுத்தலின் பேரில் இர தரப்பினரும் சமரசம் பேச முயன்றனர். அதுவும் தோல்வியில் முடிந்தது.

சமரசம் செய்ய முயலும் கமல்

சமரசம் செய்ய முயலும் கமல்

தேர்தல் வேலைகள் முடிந்து விட்டதாலும், இந்தியன் 2 விவகாரம் முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டே போவதாலும் இந்த விவகாரத்தில் தலையிட கமல் முடிவு செய்துள்ளார். இரு தரப்பினரிடமும் சமரசம் பேசி, விரைவில் படப்பிடிப்பை துவக்கவும் கமல் திட்டமிட்டுள்ளார்.

லைகா தான் தாமதத்திற்கு காரணம்

லைகா தான் தாமதத்திற்கு காரணம்

இதற்கிடையில் இந்தியன் 2 விவகாரம் தொடர்பான வழக்கு இன்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தியன் 2 தாமதத்திற்கு லைகா நிறுவனமே காரணம் என ஷங்கர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும் ஷங்கர் தரப்பில் கூறுகையில், இந்தியன் 2 படத்தின் பட்ஜெட்டை ரூ.250 கோடியாக குறைத்து, நிதி ஒதுக்குவதில் லைகா தாமதம் செய்தது.

கமலுக்கு மேக் அப்பில் அலர்ஜி

கமலுக்கு மேக் அப்பில் அலர்ஜி

அத்துடன் கமலுக்கு மேக் அப்பில் அலர்ஜி ஏற்பட்டது, படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டதும் தான் இந்தியன் 2 தாமதமானதற்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. இந்தியன் 2 படம் பிரம்மாண்ட படமாக எடுக்கப்பட உள்ளதால் ரூ.300 கோடிக்கு மேல் நிதி ஒதுக்க லைகா தரப்பு ஆரம்பத்தில் பேசி இருந்ததாக கூறப்படுகிறது.

ஷங்கருக்கு தடை கேட்ட லைகா

ஷங்கருக்கு தடை கேட்ட லைகா

ஏற்கனவே லைகா சார்பில் ஷங்கருக்கு எதிராக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிலும் படத்திற்கான ரூ.250 கோடியில் ஏற்கனவே ரூ.186 கோடி செலவிடப்பட்டு விட்டதாகவும், ஷங்கருக்கு சம்பளமாக ரூ.20 கோடி வரை கொடுத்துள்ளதாகவும் கூறி இருந்தது. ஷங்கருக்கு பேசப்பட்ட மீதமுள்ள சம்பள பணத்தை கோர்ட்டில் செலுத்த தயாராக இருப்பதாகவும், ஆனால் ஷங்கர் மற்ற படங்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என்று தான் லைகா கேட்டிருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X