இயக்குனர் ஷங்கர் எனக்கு வைத்த செல்ல பெயர் இது தான்... பல ஆண்டுகளுக்குப் பிறகு பகிர்ந்த விக்ரம்!

சென்னை: நடிகர் விக்ரம்,மகன் துருவ் உடன் இணைந்து நடித்த மகான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியது

மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் தற்போது விக்ரம் நடித்து வருகிறார்

அந்நியன் மற்றும் ஐ உள்ளிட்ட படங்களில் ஷங்கருடன் இணைந்து பணியாற்றியுள்ள விக்ரமை ஷங்கர் செல்லப் பெயர் வைத்து தான் கூப்பிடுவாராம்.

உடலை வருத்திக்கொண்டு நடிக்கும்

உடலை வருத்திக்கொண்டு நடிக்கும்

நடிகர் விக்ரம் ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர். அவ்வாறு தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைக்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் உடலை வருத்திக்கொண்டு நடிக்கும் விக்ரம் தமிழ் சினிமாவில் தனித்துவமான முன்னணி நடிகராக உள்ளவர். விக்ரமை தொடர்ந்து அவரது மகன் துருவ் இப்போது தமிழ் சினிமாவில் இளம் நடிகராக கலக்கிக் கொண்டு உள்ளார்.

அப்பா விக்ரமுடன் இணைந்து

அப்பா விக்ரமுடன் இணைந்து

ஆதித்ய வர்மா மூலம் அறிமுகமான துருவ் அடுத்த படத்திலேயே அப்பா விக்ரமுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார். கேங்ஸ்டர் படங்களுக்கு பெயர் போன இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் துருவ் மற்றும் விக்ரம் இணைந்து நடித்த மகான் சமீபத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. இந்த படத்தில் விக்ரம் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பியிருப்பார்.

ஆதித்ய கரிகாலனாக

ஆதித்ய கரிகாலனாக

மகான் கொடுத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம் நடித்து வருகிறார். பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது. இதுதவிர துருவ நட்சத்திரம், கோப்ரா உள்ளிட்ட படங்களும் விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ளது.

சவாலான கதாபாத்திரங்களை

சவாலான கதாபாத்திரங்களை

அடுத்ததாக பா ரஞ்சித்,மாரி செல்வராஜ்,ஏ ஆர் முருகதாஸ் உள்ளிட்ட இயக்குனர்களின் திரைப்படங்களில் வரிசையாக நடிக்க உள்ளார். இந்திய அளவில் பிரமாண்ட படங்களுக்கு பெயர் போன இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் அந்நியன் மற்றும் ஐ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் இரண்டு படங்களிலுமே சவாலான கதாபாத்திரங்களை செய்திருப்பார்.

360 டிகிரி

360 டிகிரி

விக்ரமை ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினரும் சியான் என செல்லப் பெயர் வைத்து அழைத்து வருகின்றனர். ஆனால் இயக்குனர் ஷங்கர் விக்ரமை படப்பிடிப்பில் 360 டிகிரி என தான் செல்லமாக அழைப்பாராம். அதற்கு காரணம் படப்பிடிப்பில் எது என்ன நடந்தாலும் விக்ரம் அதை துல்லியமாக கவனித்துக் கூறுவாராம் .இந்த தகவலை நடிகர் விக்ரம் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X