இந்தியன் 2 ஷூட்டிங்கை கேன்சல் செய்த ஷங்கர்.. காரணம் என்ன தெரியுமா?

சென்னை: இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து ஏற்பட்டதை அடுத்து மூன்று பேர் உயிரிழந்ததால் அந்த நாளில் மட்டும் ஷூட்டிங் நடத்துவதில்லை என ஷங்கர் முடிவு செய்திருக்கிறார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். சுதந்திர போராட்டத்தையும், லஞ்சத்தையும் மையமாக வைத்து உருவாகியிருந்த இந்தியன் மெகா ப்ளாக் ப்ஸ்டர் ஆனது. இதனையடுத்து பல வருடங்களுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக திட்டமிடப்பட்டது.

ஆரம்பித்தது இந்தியன் 2

ஆரம்பித்தது இந்தியன் 2

அதன்படி இந்தியன் 2 படம் ஆரம்பிக்கப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிப்பில் இறங்கியது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கடந்த 2019ஆம் ஆண்டு ஷூட்டிங்கும் தொடங்கிய சூழலில் சில பிரச்னைகளின் காரணமாக ஷூட்டிங் தடைப்பட்டது. அதன் பின் மீண்டும் 2020ஆம் ஆண்டு முழுவீச்சில் ஷுட்டிங் தொடங்கியது.

இந்தியன் 2வில் விபத்து; பறிபோன உயிர்கள்

இந்தியன் 2வில் விபத்து; பறிபோன உயிர்கள்

2020ஆம் ஆண்டு தொடங்கி நடந்துவந்த ஷூட்டிங்கில் கிரேன் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஷங்கரின் உதவி இயக்குநர்கள் உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது மிகப்பெரும் விவாதத்தை ஏற்படுத்திய சூழலில் ஷூட்டிங் மீண்டும் நிறுத்தப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடங்கப்படாமல் இருந்தது.

களத்தில் குதித்த ரெட் ஜெயண்ட்

களத்தில் குதித்த ரெட் ஜெயண்ட்

இதனால் இந்தியன் 2 படம் பெரும்பாலும் கைவிடப்பட்டுவிட்டது என்றே பலராலும் கருதப்பட்டது. கமல் ஹாசனும் விக்ரம் படத்தில் நடித்து மெகா ஹிட்டை கொடுத்துவிட்டார். இதனால் இந்தியன் 2 நிச்சயம் மீண்டும் தொடங்கப்படாது என்பது கிட்டத்தட்ட உறுதியானது. இப்படிப்பட்ட சூழலில் இந்தியன் 2 படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனமும் லைகாவுடன் இணைந்து தயாரிக்க முன் வந்தது.

மீண்டும் டேக் ஆஃப் ஆன இந்தியன் 2

மீண்டும் டேக் ஆஃப் ஆன இந்தியன் 2

இதனையடுத்து இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் மீண்டும் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. சென்னை, ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி ட்ரெண்டாகின. சமீபத்தில் சென்னையிலும் இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

 சென்ட்டிமென்ட் பார்க்கும் இயக்குநர் ஷங்கர்

சென்ட்டிமென்ட் பார்க்கும் இயக்குநர் ஷங்கர்

இந்நிலையில் சென்னையில் தற்போது ஷூட்டிங் நடந்துவரும் சூழலில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி ஷூட்டிங்கை ஷங்கர் கேன்சல் செய்திருக்கிறார். ஏனெனில் அன்றைய தினம்தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து ஏற்பட்ட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் நடந்தது. இதனால் சென்ட்டிமென்ட்டாக அன்றைய ஷூட்டிங்கை வைக்க வேண்டாம் என்று கூறிவிட்டாராம் ஷங்கர். இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருந்த் இசையமைக்கிறார். இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X