HBD Shankar: கேம் சேஞ்சரில் ஆட்டத்தை மாற்ற முயற்சிக்கும் ஷங்கருக்கு பிறந்த நாள் இன்று!

சென்னை: தமிழ் சினிமாவில் இயக்குநராக அவதாரம் எடுத்ததில் இருந்து தனக்கென தனி திரைமொழியை உருவாக்கி வைத்துள்ளவர் இயக்குநர் ஷங்கர். இன்று அவர் தனது 61வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என பெயர் பெற்ற ஷங்கர் உலகம் முழுவதும் கவனிக்கப்படும் இயக்குநராக உள்ளார். இவரது பிறந்த நாளான இன்று சினிமா துறையில் ஷங்கர் கடந்து வந்த பாதையைக் காணலாம்.

ஷங்கர் ஜென்டில்மேன் என்ற படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் கால் பதித்தவர். தனது முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் திரும்பிப் பார்க்கும் வகையில், மாபெரும் வெற்றியைக் கொடுத்தார். அதன் பின்னர் இவர் இயக்கத்தில் வெளியான காதலன், இந்தியன் திரைப்படம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. அதன் பின்னர் பிரசாந்த்தை வைத்து இரட்டை வேடங்களில் ஜீன்ஸ் படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடலில், உலகத்தின் ஏழு அதிசயங்களைச் சுற்றிக் காட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் வைத்தார். அதன் பின்னர் இவரது இயக்கத்தில் நடிக்க தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமா பிரபலங்களே வரிசையாக நின்றனர்.

Shankar Shankar Birthday

பாடல்கள் வந்தாலே வெளியே போய் டீ சாப்பிட்டுவிட்டு வரலாம் என இருந்த ஒரு சில ரசிகர்களையும் பாடல் காட்சிகளை தனது, பிரமாண்டமான இயக்கத்தினால், அனைவரையும் திரையில் இருந்து கண்களை நகர்த்தாமல் செய்தவர் ஷங்கர். ஜீன்ஸ் படத்தின் பாடல்கள் இப்போதுவரை அனைவரையும், ஆச்சரியப்படுத்தும் பாடல்களில் ஒன்றாக நிலைத்து நிற்கின்றது. ஜீன்ஸ் படத்திற்குப் பின்னர், முதல்வன் படத்தில் ஒரு நாள் முதலமைச்சர் என்ற அதிரடியான திரைக்கதை இன்றுவரை கொண்டாடப்படுகின்றது. இந்தப் படம் ஹிந்தியில் ரீ மேக் செய்யப்பட்டது.

பாய்ஸ்: இளைஞர்கள் குறிப்பாக திருமணமாகாத இளைஞர்கள் மீது பல திரைப்படங்களில் தொடர்ந்து அவதூறாகவும் அபத்தமாகவும் காட்சிகள் எடுக்கப்பட்டுவந்த நிலையில் பாய்ஸ் என்ற படத்தின் மூலம் பலருக்கு பளார் விட்டார் ஷங்கர். அதன் பின்னர் அந்நியன் படம். யாருமே எதிர்பார்க்காத கதைக்களம், யாருமே எதிர்பார்க்காத திரைக்கதை என ஒட்டுமொத்த படத்திலும் அதிரவிட்டிருந்தார்.

Shankar Shankar Birthday

ரீ-மேக்: அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து சிவாஜி, எந்திரன் படங்கள் என அடுத்தடுத்து ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து, அனைவரையும் மிரள வைத்தார். தனது கதை திரைக்கதையில் மெகா ஹிட் படங்களைக் கொடுத்து வந்த ஷங்கர் திடீரென ரீ-மேக் செய்கின்றேன் என நண்பன் படத்தை இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்தார். அதன் பின்னர் இவர் இயக்கிய ஐ படம், அதற்காக அவர் காத்திருந்த காலம், விக்ரம் இந்த படத்திற்காக செலுத்திய உழைப்பு என அனைத்தும் படத்திற்கு மாபெரும் வெற்றியை ஈட்டித்தந்தது.

Shankar Shankar Birthday

பார்ட் 2 பரிதாபங்கள்: ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் இரண்டாம் பாகத்தில் களமிறங்கியதால், ஷங்கரும் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார். அந்தபடம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெறவில்லை என்றாலும், வசூல் ரீதியாக இன்றைக்கும் டாப் லிஸ்ட்டில் உள்ளது. சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஷங்கரின் படமா இது என கேள்வி கேட்கும் அளவிற்கு படத்தின் தரம் இருந்தது. இந்நிலையில் இவரது அடுத்தப் படமான கேம் சேஞ்சர் படம் உருவாகி வருகின்றது. இந்தப் படத்தில் வெற்றி கொடுத்து ஷங்கர் கம்பேக் கொடுக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டு உள்ளனர். கேம் சேஞ்சர் படத்தின் மூலம் தனது ஆட்டத்தை பழையபடி கொண்டு வர இந்த பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்துகள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X