Director Shankar: டைரக்டர் ஷங்கர் பிறந்தநாள்.. யாரோட கொண்டாடியிருக்காரு பாருங்க!

சென்னை: டைரக்டர் ஷங்கர் பிரம்மாண்டங்களின் இயக்குநர் என்று சர்வதேச அளவில் கொண்டாடப்படுபவர்.

அடுத்தடுத்த சிறப்பான பல படங்களை கொடுத்துள்ளவர். ரஜினி, கமல், விஜய், அர்ஜூன் என முன்னணி ஹீரோக்களை இயக்கி மாஸ் காட்டியுள்ளவர். தற்போது கமல்ஹாசனை கொண்டு இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கிலும் ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

Director Shankar celebrates his birthday with Game changer team including Ram Charan

கேம் சேஞ்சர் படக்குழுவினருடன் ஷங்கர் பிறந்தநாள் கொண்டாட்டம்: பிரம்மாண்டங்களின் இயக்குநர் என்று சர்வதேச அளவில் கொண்டாடப்படுபவர் இயக்குநர் ஷங்கர். இவரது பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளன. ரஜினி, கமல்ஹாசன், விஜய், அர்ஜூன் என முன்னணி நடிகர்களின் ரஜினியின் எந்திரன் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கிய ஷங்கர், தற்போது கமலின் இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த ஆண்டில் படம் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2018ம் ஆண்டிலேயே சூட்டிங் துவங்கப்பட்ட இந்தியன் 2 படம், சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்து, கொரோனா தாக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் நிறுத்தப்பட்டது. ஷங்கருக்கும் தயாரிப்பு தரப்பிற்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் பிரச்சினைகள் அனைத்தும் பேசி தீர்க்கப்பட்டு, கடந்த ஆண்டில் மீண்டும இந்தியன் 2 படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டது.

முன்னதாக தெலுங்கில் ராம்சரணுடன் கூட்டணி அமைத்தார் ஷங்கர். அவரது கேம் சேஞ்சர் படத்தில் கமிட்டாகி சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்த நேரத்தில் இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கும் துவங்கப்பட்ட நிலையில், இரண்டு படங்களின் சூட்டிங்கையும் ஒரே நேரத்தில் சிறப்பாக கையாண்டார் ஷங்கர். தற்போது இரு படங்களின் சூட்டிங்கும் ஏறக்குறைய இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த ஆண்டில் இரு படங்களும் கோடை கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் ஷங்கர். இதையொட்டி அவருக்கு சமூக வலைதளங்களிலும் நேரிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அவருக்காக காமன் டிபியை வெளியிட்டு ரசிகர்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் ஷங்கரின் சாதனையை வெளிப்படுத்தும் வகையில் வீடியோக்களும் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. இதனிடையே தன்னுடைய பிறந்தநாளை கேம் சேஞ்சர் படக்குழுவினருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் ஷங்கர்.

இந்தக் கொண்டாட்டத்தில் ஷங்கருடன் நடிகர் ராம் சரண் மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜூ பங்கேற்றுள்ளனர். இதன் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் புகைப்படத்தில் கேட் வெட்டப்பட்டு, ராம்சரண் ஷங்கருக்கு ஊட்டி விடுவதை பார்க்க முடிகிறது. இதனிடையே கேம் சேஞ்சர் படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X