twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்நியன் கதை என்னுடையது.. யாரும் குறுக்கிட முடியாது: பிரபல தயாரிப்பாளருக்கு இயக்குநர் ஷங்கர் பதிலடி!

    |

    சென்னை: அந்நியன் திரைப்படத்தின் கதை தன்னுடையது என்றும் அதில் யாரும் உரிமை கோர முடியாது என்றும் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

    இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தமிழில் வெளியாகி பெரும் ஹிட்டான படம் அந்நியன். இந்தப் படத்தில் விக்ரம், சதா, பிரகாஷ் ராஜ், விவேக் என பலர் நடித்திருந்தனர்.

    இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கர் இந்தியில் ரீமேக் செய்யவுள்ளார். இதில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் லீடிங் ரோலில் நடிக்கவுள்ளார்.

    ஒன்னு அப்டி.. இல்லாட்டி இப்டி.. டிக்டாக் இலக்கியாவின் பப்பரப்பா போஸை பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!ஒன்னு அப்டி.. இல்லாட்டி இப்டி.. டிக்டாக் இலக்கியாவின் பப்பரப்பா போஸை பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!

    ஷங்கருக்கு நோட்டீஸ்

    ஷங்கருக்கு நோட்டீஸ்

    இந்நிலையில் அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் ஷங்கருக்கு அப்படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன் நேற்று நோட்டீஸ் அனுப்பினார். எழுத்தாளர் சுஜாதா எழுதிய அந்நியன் பட கதையின் உரிமையை பணம் கொடுத்து தான் வாங்கிவிட்டதாகவும் கூறியிருந்தார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

    சட்ட விரோதம்

    சட்ட விரோதம்

    மேலும் தனது அனுமதியின்றி அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்வது சட்ட விரோதம் என்று கூறிய ஆஸ்கர் ரவிச்சந்திரன், ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பென் ஸ்டுடியோ தயாரிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்பினார்.

    அதிர்ச்சி அடைந்தேன்

    இயக்குநர் ஷங்கருக்கு ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, அந்நியன் கதை உங்களுடையது என கூறி நீங்கள் 14.4.2021 அன்று அனுப்பியிருக்கும் மெயிலை பார்த்து அதிர்ச்சி அடைந்ததேன்.

    என்னுடைய கதை

    என்னுடைய கதை

    அந்நியன் 2005-ம் ஆண்டு வெளியானது. அந்தப் படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே, அதன் கதையும், திரைக்கதையும் என்னுடையது என்று தெரியும். கதை, திரைக்கதை, இயக்கம் ஷங்கர் என்கிற பெயருடன்தான் இந்தப் படமும் வெளியானது. படத்தின் திரைக்கதையை எழுத நான் யாரையும் நியமிக்கவில்லை.

    யாரும் குறுக்கிட முடியாது

    யாரும் குறுக்கிட முடியாது

    ஆதலால், இதன் திரைக்கதையை நான் விரும்பும்படி பயன்படுத்திக் கொள்ள எனக்கு உரிமை உள்ளது. படைப்பை எழுதியவன் என்ற முறையில் எந்தச் சூழலிலும், எனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது.

    வசனகர்த்தா மட்டும்தான்

    வசனகர்த்தா மட்டும்தான்

    மறைந்த சுஜாதாவின் பெயரை இதில் சம்பந்தப்படுத்தியதை கண்டு ஆச்சரியமடைந்தேன். இந்தப் படத்துக்கு அவர் வசனங்கள் எழுத மட்டுமே நியமிக்கப்பட்டார். அதற்கான உரிய பெயரும், அவருக்கு கொடுக்கப்பட்டது. அவர் எந்த விதத்திலும் திரைக்கதையிலோ, பாத்திரப் படைப்பிலோ சம்பந்தப்படவில்லை. எனவே வசனகர்த்தா என்பதைத் தாண்டி அவர் வேறு எந்த வகையிலும் இதில் ஈடுபடவில்லை.

    எந்த அடிப்படையும் இல்லை

    எந்த அடிப்படையும் இல்லை

    திரைக்கதை என்னிடம் இருப்பதால் அதை நான் விரும்பும் வகையில் பயன்படுத்திக் கொள்ளும் முழு உரிமை எனக்கு உள்ளது. ஏன், அந்நியனுக்காக நீங்களோ, உங்கள் நிறுவனமோ எந்த விதமான உரிமைகளையும் கோர முடியாது, ரீமேக் செய்யவும் முடியாது. ஏனெனில் அந்த உரிமை உங்களுக்கு எழுத்துபூர்வமாக தரப்படவில்லை. அப்படி எதுவும் இல்லாத நிலையில், படத்தின் கதைக்கான உரிமை உங்களிடம் உள்ளது என்பதைச் சொல்ல உங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை.

    ஆதாயம் தேடப் பார்க்கிறீர்கள்

    ஆதாயம் தேடப் பார்க்கிறீர்கள்

    ஒரு தயாரிப்பாளராக, ‘அந்நியன்' படத்தின் மூலம் நல்ல லாபம் அடைந்துள்ளீர்கள். தற்போது தேவையின்றி, உங்களுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத எனது எதிர்கால முயற்சிகளின் மூலம் ஆதாயம் தேடப் பார்க்கிறீர்கள். இந்த விளக்கத்துக்குப் பின்னராவது உங்களுக்கு ஒழுங்கான புரிதல் வரவேண்டும். இனி இது போன்ற அடிப்படையற்ற விஷயங்களை பேச மாட்டீர்கள் என்று நம்புகிறேன்". இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Director Shankar clarifies Oscar Ravichandran for his notice to Anniyan Hindi Remake. Oscar Ravichandran issues notice to Director Shankar for Remaking Anniyan in Hindi without his permission.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X