360 டிகிரியும் ஃபயர் தான்.. விக்ரம் படத்தை பாராட்டிய ஷங்கர்.. இந்தியன் 2வுக்கு தயாராகிட்டாரு போல!

சென்னை: விக்ரம் படம் வெளியான 5 நாட்களிலேயே 200 கோடி வசூலை உலகளவில் தட்டித் தூக்கி இருக்கிறது.

Recommended Video

Vikram பட வெற்றிக்காக நன்றி கூறி 5 மொழிகளில் பேசி வீடியோக்களை வெளியிட்டார் Kamal #Kollywood

விக்ரம் படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் கமல் மற்றும் விக்ரம் படத்தில் நடித்த நடிகர்களை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் படத்தை பார்த்த அனுபவத்தையும் கமலையும் வெகுவாக பாராட்டி உள்ளார்.

சின்ன ரோல் கூட

சின்ன ரோல் கூட

வலிமை, பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களை தாண்டி, மற்ற நடிகர்களுக்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லாத நிலையில், விக்ரம் படத்தில் சமையல்காரியாக வரும் ஏஜென்ட் டீனா, ரெட் லைட் ஏரியாவில் வரும் மாயா, கமலின் நண்பர் சந்தான பாரதி என சின்ன சின்ன கதாபாத்திரங்களுக்கு கூட முக்கியத்துவம் கொடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செதுக்கியதன் விளைவு தான் எங்கேயும் படம் தொய்வடையாமல் வெற்றி பெற்று இருக்கிறது.

ஷங்கர் பாராட்டு

ஷங்கர் பாராட்டு

விக்ரம் படத்தை பார்த்து உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பாராட்டி வரும் நிலையில், இயக்குநர் ஷங்கரும் உடனடியாக படத்தை பார்த்து பாராட்டி பதிவிட்டுள்ள ட்வீட் டிரெண்டாகி வருகிறது. கேஜிஎஃப் 2, ஆர்.ஆர்.ஆர் படங்களை பார்த்து சமீபத்தில் அவர் பதிவிட்ட நிலையில், விக்ரம் படத்தையும் பாரத்து பாராட்டி உள்ளார்.

360 டிகிரியும் ஃபயர்

360 டிகிரியும் ஃபயர்

பெரிய திரையில் கமல்ஹாசனை பார்ப்பதே அப்படியொரு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. 360 டிகிரியும் ஃபயர் ஆகும் அளவுக்கு நடித்து தான் ஒரு உண்மையான லெஜண்ட் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படியொரு உழைப்பை போட்டு படத்தை உருவாக்கி இருப்பதற்கு பாராட்டுக்கள். ரியல் ராக்ஸ்டார் அனிருத் தான். அன்பறிவு மாஸ்டர்கள் வெறித்தனம். மேலும், படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் படக்குழுவுக்கும் எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

இந்தியன் 2 ரெடியாகுமா

இந்தியன் 2 ரெடியாகுமா

இயக்குநர் ஷங்கர் விக்ரம் படத்தை பார்த்து பாராட்டிய நிலையில், இந்தியன் 2 படம் மீண்டும் எப்போ சார் தொடங்கும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு கேட்டு வருகின்றனர். சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினே உறுதியளித்த நிலையில், நீங்களும் ஒரு ட்வீட் போட்டு அதனை உறுதி செய்யுங்கள் ஷங்கர் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதை மாற்றவில்லை

அதை மாற்றவில்லை

இந்திய 2 திரைப்படம் பாதியில் நின்று போன நிலையில், ராம்சரணின் 15வது படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ஷங்கர். அந்த படத்தைத் தொடர்ந்து அந்நியன் இந்தி ரீமேக்கை ரன்வீர் சிங்கை வைத்து பாலிவுட்டில் இயக்க உள்ளார். இந்நிலையில், இந்தியன் 2 புகைப்படத்தை தனது ட்விட்டர் ஐடி புரொஃபைலில் இருந்து இன்னமும் மாற்றாமல் ஷங்கர் இருப்பதே அந்த படத்தின் மீதான அவருக்கு உள்ள ஈடுபாட்டை தெளிவாக காட்டுகிறது.

1000 கோடி வரும்

1000 கோடி வரும்

விக்ரம் திரைப்படம் 500 கோடி வசூலை அசால்ட்டாக அள்ளும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அடுத்ததாக இந்தியன் 2 படம் ஆரம்பிக்கப்பட்டு அதிரடியாக ஷூட்டிங் முடிந்து படம் வெளியானால், நிச்சயம் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளும் முதல் தமிழ் சினிமாவாக இந்தியன் 2 மாறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எகிற விட்டு வருகின்றனர்.

ரோலெக்ஸை பத்தி பேசவே இல்லை

ரோலெக்ஸை பத்தி பேசவே இல்லை

கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத்தை மட்டுமே குறிப்பிட்டு ஷங்கர் பாராட்டியதை பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். விஜய்சேதுபதி, பகத் ஃபாசிலை ஏன் குறிப்பிடவில்லை என்றும் குறிப்பாக கடைசியில் வந்து திரையை தீப்பிடிக்க வைத்த ரோலக்ஸ் சூர்யாவை ஏன் குறிப்பிட்டு பாராட்டவில்லை என்றும் ரசிகர்கள் இயக்குநர் ஷங்கரிடம் கேள்வி எழுப்பி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X