ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம்… மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க !

சென்னை : ஆங்கில திரைப்படங்களுக்கு நிகராக தமிழ் திரைப்படங்களில் புது புது யுக்திகளை புகுத்தி பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் எடுத்தவர் இயக்குனர் ஷங்கர்.

இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கு அடுத்த வாரம் பொள்ளாச்சியில் திருமணம் நடைபெற உள்ளது.

கொரோனா பிரச்சினையால் திருமணத்தை எளிமையாக நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இயக்குனராக அறிமுகம்

இயக்குனராக அறிமுகம்

எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்த ஷங்கர் ஜென்டில்மேன் திரைப்படத்தை இயக்கி இயக்குனராக தனது அறிமுகத்தை கொடுத்தார். இந்த திரைப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் மற்றும் மதுபாலா, கவுண்டமணி, செந்தில் நடித்திருந்தார்கள். முதல் படத்திலேயே சிறந்த இயக்குனர் என பெயர் எடுத்தார்.

வெற்றிப்படங்கள்

வெற்றிப்படங்கள்

காதலன்,இந்தியன்,ஜீன்ஸ், முதல்வன்,பாய்ஸ், எந்திரன், 2.0 என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்த இவர் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் எடுத்துள்ளார். இவர்,இதுவரை 12 படங்களை இயக்கியுள்ளார். அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றத் திரைப்படங்கள் தான். மேலும், இவர், நாயக் என்ற இந்தி திரைப்படத்தையும் இயக்கி உள்ளார்.

மனைவி ஈஸ்வரி

மனைவி ஈஸ்வரி

இயக்குனர் ஷங்கருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், ஐஸ்வர்யா, அதிதி என்ற மகளும் அர்ஜித் என்ற மகளும் உள்ளனர். இவர்கள் யாரையும் ஷங்கர் பொது நிகழ்ச்சிகளுக்கோ, பொது இடங்களுக்கோ அழைத்து வந்தது இல்லை. சமூகவலைத்தளங்கள் மற்றும் மீடியாவின் கண்ணில் காட்டாமல் வைத்து இருந்தார்.

அடுத்த வாரம் திருமணம்

அடுத்த வாரம் திருமணம்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், பொள்ளாட்சியில் அடுத்த வாரம் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மதுரை பாந்தர்ஸ் கிரிக்கெட் அணி உரிமையாளரின் மகன் தான் மாப்பிள்ளை என்பது தெரியவந்துள்ளது.

சென்னையில் வரவேற்பு

சென்னையில் வரவேற்பு

கொரோனா தொற்று பிரச்சினை காரணமாக திருமணத்தை எளிமையாக நடத்த இருப்பதாகவும், நிலைமை சரியான பின்பு, சென்னையில் ஒரு பெரிய வரவேற்பு இருக்கக்கூடும் என்ற கூறப்படுகிறது. இதனால் பொள்ளாச்சியில் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பான நடந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X