கணவருடன் செம ரொமான்ஸ்.. சங்கர் மகள் ஐஸ்வர்யா தருணின் போட்டோஷூட்!
சென்னை: இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவிற்கு கடந்த வாரம் கோலாகலமாக திருமணம் நடந்த நிலையில், தன்னுடைய கணவர் தருண் கார்த்திகேயனுடன் செம ரோமான்ஸ் செய்து போட்டோஷூட் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு டிரெண்டாகி வருகிறது.
இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு, புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணமான சில மாதத்திலேயே ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ரோகித்துடன் சேர்ந்து வாழவில்லை. சில பிரச்சனை காரணமாக ஐஸ்வர்யா அவரை விட்டு பிரிந்தார். மகளின் வாழ்க்கை இப்படியானதை நினைத்து வருத்தப்பட்ட ஷங்கர், ரோகித்திடமிருந்து தனது மகளுக்கு முறையாக விவாகரத்தை பெற்றார்.

இயக்குநர் ஷங்கர்: இதையடுத்து, தனது மகள் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்த ஷங்கர், தருண் கார்த்திகேயன் மருமகனாக்கி உள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் பிப்ரவரி மாதம் மிகவும் எளிமையாக நடைபெற்ற நிலையில் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் தமிழக முதலமைச்சர் மு,க, ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, கார்த்திக், மணிரத்னம், சுஹாசினி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் என ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களும் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.
செம ரொமான்ஸ்: இதையடுத்து, ஷங்கர் செய்தியாளர்களுக்கு விருந்து வைத்தார். அப்போது பேசிய ஷங்கரின் மருமகன் தருண் கார்த்திக், தான் உதவி இயக்குநர் இல்லை, அமெரிக்காவில் ஒரு சாஃப்ட்வேர் இஞ்ஜினியராக பணியாற்றி வருவதாக கூறினார். சினிமா மீது அதிக ஆர்வம் இருப்பதாக தருண் பேசி இருந்தார். இந்நிலையில், ஐஸ்வர்யா தன்னுடைய கணவர் தருண் கார்த்திகேயனுடன் ரொமான்டிக்காக எடுத்த போட்டோஷூட் இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. திருமண பந்தத்தில் இணைந்த இந்த தம்பதிகளுக்கு இணையத்தில் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கேம் சேஞ்சர்: இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2, கேம் சேஞ்சர் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்து காத்திருந்து அலுத்துப்போய் விட்டார்கள். ராம் சரணின் பிறந்தநாளான மார்ச் 27ந் தேதி கேம் சேஞ்சர் முதல் பாடலை படக்குழு வெளியிட்டது. தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இந்தியன் 2 படத்தின் புது போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இதில் தாத்தாவின் இரண்டு விதமான கெட்டப்புகள் இந்த போஸ்டரில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போனார்கள். இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











