Shankar Dayal : சோகம்! யோகி பாபு படத்தின் இயக்குநர் சங்கர் தயாள் மரணம்.. இப்படி ஒரு மரணமா?

சென்னை: நடிகர் கார்த்தி, சந்தானம், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான படம் சகுனி. இந்தப் படத்தினை இயக்கிய சங்கர் தயாள், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவருக்கு வயது 54. இவர் தனது அடுத்த படமான கழுதைகள் முன்னேற்றக் கழகம் படத்தின் ப்ரோமோசன் பணிகளுக்காகச் செல்லும்போது, மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்துவிட்டு, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது அவரது குடும்பத்தினரையும், நண்பர்களையும் படக்குழுவினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தான் இயக்கிய கழுதைகள் முன்னேற்றக் கழகம் படத்தின் ப்ரோமோசனுக்குச் செல்லும்போது அவர் தனது உயிரை இழந்துள்ளதால், சினிமாவிற்காக தனது உயிரையே தியாகம் செய்துள்ளார் என ரசிகர்கள் கவலையோடு பேசி வருகின்றனர். அந்தப் படத்தில் யோகிபாபு, செந்தில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Shankar Dayal Passed Away Shankar Dayal Kaluthaigal Munnetra Kazhagam

கார்த்தி நடிப்பில் வெளியான, சகுனி திரைப்படம் , அரசியல் நையாண்டிப் படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் இவரது, இயக்கத்தில் வெளியான படம் வீர தீர சூரன். இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சுசீந்திரன் எழுதினார். அதன் பின்னர் இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கழுதைகள் முன்னேற்றக் கழகம்.

மாரடைப்பு: இந்தப் படத்தில் யோகிபாபு, செந்தில், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் படத்தினை அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு தீவிரமாக வேலை பார்த்துவந்தது. இப்படியான நிலையில் படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சி ஒன்று, படக்குழு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ள இயக்குநர் சங்கர் தயாள் காரில் சென்றுகொண்டு இருந்துள்ளார்.

மறைவு: அப்போது அவருக்கு தீடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. நெஞ்சு வலியால் துடித்த அவரை, உடனே, அருகில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இவரது மரணம் படக்குழுவினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சகுனி படத்தை விடவும், அதிகப்படியான அரசியல் நையாண்டித் தனம் உள்ள படமாக, கழுதைகள் முன்னேற்றக் கழகம் படம் இருக்கும் என அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில், படத்தின் ரிலீஸ்க்கு முன்னர் அவர் இறந்தது படக்குழுவினரை மட்டும் இல்லாமல், திரைத்துறையினரையும், ரசிகர்களையும் குடும்பத்தினரையும், நண்பர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X