Director Shankar: இயக்குநர் ஷங்கர் பர்த்டே பார்ட்டி... ஒன்றுகூடிய பிரபலங்கள்... ட்ரெண்டாகும் போட்டோ!
சென்னை: இயக்குநர் ஷங்கர் நேற்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார்.
கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர், ஒரேநேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வருகிறார்.

இந்தியன் 2, கேம் சேஞ்சர் என இரண்டு படங்களும் ஷங்கர் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஷங்கரின் பர்த்டே பார்ட்டியில் கோலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்ட போட்டோ ட்ரெண்டாகி வருகிறது.
ஷங்கர் பர்த்டே பார்ட்டியில் பிரபலங்கள்: அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஷங்கர். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த ஷங்கர், அடுத்தடுத்து பிரம்மாண்டமான படங்களை இயக்கி மாஸ் காட்டினார். காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், எந்திரன், நண்பன், ஐ, 2.O என ஷங்கரின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்துள்ளன.
தற்போது தெலுங்கு சூப்பர் ஹீரோ ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர், தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 என ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களுமே அடுத்தாண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோலிவுட்டின் தற்போதையை சீனியர் இயக்குநர்களில் ஷங்கரும் மிக முக்கியமானவர்.
இந்நிலையில் நேற்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடிய ஷங்கருக்கு, திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். சமீபத்தில் தான் திரையுலகில் 30 ஆண்டுகளை கடந்ததையும் இயக்குநர் கொண்டாடினார். அதன் தொடர்ச்சியாக நேற்று பிறந்தநாளையும் சினிமா நட்சத்திரங்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார். இதில், சீயான் விக்ரம் முதல் ஆளாக கலந்துகொண்டு ஷங்கருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
விக்ரம் - ஷங்கர் காம்போவில் அந்நியன், ஐ என இரண்டு படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. விக்ரம் தவிர முன்னணி இயக்குநர்கள் சிலரும் இந்த பார்ட்டியில் கலந்துகொண்டனர். வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், கெளதம் மேனன், லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ், எஸ்ஜே சூர்யா, ராஜா, சசி, விக்னேஷ் சிவன் ஆகியோர் ஷங்கரின் பர்த்டே பார்ட்டியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டோவை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள எஸ்ஜே சூர்யா, இயக்குநர் ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஷங்கரின் நண்பன் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்த எஸ்ஜே சூர்யா, தற்போது கேம் சேஞ்சர் படத்தின் வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஷங்கர் பர்த்டே பார்ட்டியில் முன்னணி இயக்குநர்கள் கலந்துகொண்ட போட்டோ டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.



Click it and Unblock the Notifications











