Shankar: படங்கள் மாதிரி வீடு, லைஃப் ஸ்டைல் எல்லாமே பிரம்மாண்டம் தான்... ஷங்கரின் சொத்து மதிப்பு!
சென்னை: ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஷங்கர்.
தற்போது கேம்சேஞ்சர், இந்தியன் 2 என இரண்டு படங்களை ஒரேநேரத்தில் இயக்கி வருகிறார். முதல் படத்தில் இருந்தே பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கரின் 60வது பிறந்ததினம் இன்று.

இயக்குநர் ஷங்கரின் பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம்.
இயக்குநர் ஷங்கரின் சொத்து மதிப்பு : 1993ம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஷங்கர். அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது. முதல் படத்திலேயே வித்தியாசமான மேக்கிங், கிராபிக்ஸ் காட்சிகளால் மாஸ் காட்டிய ஷங்கர், அடுத்தடுத்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, 2.O போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது தெலுங்கு சூப்பர் ஹீரோ ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தை இயக்கியுள்ளார். அதேபோல் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தையும் இயக்கி வருகிறார். ஒரேநேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வரும் ஷங்கர், இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
கதை, திரைக்கதையை தாண்டி ஷங்கரின் படங்களில் அனைத்துமே மிகப் பிரம்மாண்டமாக இருக்கும். ஜீன்ஸ் படத்தில் ஒரு பாடலுக்காக உலகின் ஏழு அதிசயங்களையும் சுற்றி வந்தவர் அவர். அதேபோல், கிராபிக்ஸ், செட்டிங் என ஷங்கர் படங்களில் ப்ரொடக்ஷன் காஸ்ட் மட்டுமே பல கோடிகளை தொடுமாம். ஹீரோக்களின் சம்பளத்தை விடவும் ஷங்கர் போடும் பட்ஜெட் அதிகம் என சொல்லப்படுகிறது.
இவர் படங்களுக்கு மட்டும் தான் இப்படி பிரம்மாண்டமான பட்ஜெட் போடுகிறார் என பார்த்தால், ரியல் லைஃப்பிலும் ரொம்பவே ஹை-டெக் ஆன ஆள்தானாம். உதவி இயக்குநராக வேலை பார்த்தபோதே லட்சங்களில் சம்பளம், கார் என வசதியாக வாழ்ந்தவர் ஷங்கர். இப்போது ஒரு படத்துக்கு 40 முதல் 50 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர தனது எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் படங்கள் தயாரிப்பது, விநியோகிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் ஷங்கர். தனது உதவி இயக்குநர்கள் தங்குவதற்காகவே சொந்தமாக பில்டிங் வைத்துள்ள ஷங்கர், அவர்களுக்கு பைக் வாங்கி கொடுத்துவிடுவாராம். சென்னையில் உள்ள ஷங்கரின் சொந்த வீடு, அவரது படங்களில் வருவதை போல அப்படியொரு ஹைடெக்காக உருவாக்கப்பட்டுள்ளதாம்.

கேட் முதல் பெட்ரூம், கிச்சன் வரை எல்லா இடங்களிலும் ரிமோட், சென்சார் போன்ற டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளதாம். மினி தியேட்டர், ஜிம், நீச்சல் குளம் என 5 ஸ்டார் ஹோட்டலின் அனைத்து அம்சங்களும் இயக்குநர் ஷங்கரின் வீட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. சென்னை மட்டும் இல்லாமல் மும்பை, ஹைதராபாத்திலும் ஷங்கருக்கு சொந்தமாக வீடுகள் இருக்கின்றதாம்.
தனது சொந்த பயன்பாட்டுக்கு மட்டும் 4 கோடி ரூபாய் மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் காரை பயன்படுத்துகிறாராம் ஷங்கர். அதுதவிர BMW, ஆடி, ரேஞ்ச் ரோவர் போன்ற கார்களும் ஷங்கரிடம் உள்ளன. ஒட்டுமொத்தமாக அவரிடம் இருக்கும் கார்களின் மதிப்பு மட்டுமே 8 முதல் 10 கோடி ரூபாய் வரை என சொல்லப்படுகிறது. இயக்குநராக சம்பளம், ரியல் எஸ்டேட் வருமானம் என பல வழிகளிலும் மாதம் 2 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறாராம். அதேபோல் ஷங்கரின் சொத்து மதிப்பு ஒட்டுமொத்தமாக 150 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும் எனவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











