twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தலையை சுற்றி ஆயிரம் பிரச்சனைகள்.. கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் நன்கொடை.. சபாஷ் ஷங்கர்!

    |

    சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், கொரோனா நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார் இயக்குநர் ஷங்கர்.

    இந்தியன் 2 விவகாரம் தொடர்பாக ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    மாராப்பை கயிறு போல் திரித்து.. செம குத்து குத்திய இலக்கியா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்! மாராப்பை கயிறு போல் திரித்து.. செம குத்து குத்திய இலக்கியா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

    தலையை சுற்றி ஆயிரம் பிரச்சனைகள் இருந்தபோதும் மக்கள் நலனுக்காக நன்கொடை அளித்துள்ள இயக்குநர் ஷங்கரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

    கொரோனா நிவாரண நிதி

    கொரோனா நிவாரண நிதி

    கொரோனா பரவலை தடுக்க முதல்வர் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க முன் வாருங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்திருந்தார். நடிகர் சூர்யாவின் குடும்பம், தல அஜித் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களும் நிதி வழங்கி உள்ளனர்.

    இயக்குநர்களும் சும்மா இல்லை

    இயக்குநர்களும் சும்மா இல்லை

    நடிகர்கள் மட்டும் தான் கொடுக்க வேண்டும் என நினைக்காமல் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் 25 லட்சம் ரூபாய் நிதியும், சி.எஸ். அமுதன் 50 ஆயிரம் ரூபாய் நிதியும் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான செளந்தர்யா தனது கணவர் குடும்பம் சார்பாக 1 கோடி ரூபாய் நிதியும் இதுவரை வழங்கி உள்ளனர்.

    சபாஷ் ஷங்கர்

    சபாஷ் ஷங்கர்

    இந்நிலையில், தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர் தனது சார்பாக ரூ. 10 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளார். இயக்குநர் ஷங்கர் நிதி வழங்கியதை அறிந்த அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை பாராட்டி வருகின்றனர். இவ்வளவு குறைவாக கொடுத்து இருக்கீங்களே என சிலர் ட்ரோல்களும் செய்து வருகின்றனர்.

    தலையை சுற்றி பிரச்சனை

    தலையை சுற்றி பிரச்சனை

    எவ்வளவு கொடுக்கிறார் என்பது முக்கியமல்ல முதலில் கொடுக்க வேண்டும் அதுதான் முக்கியம் என ஷங்கர் ரசிகர்கள் ஹேட்டர்களை எதிர்த்து ட்வீட்டும் போட்டும் வருகின்றனர். இந்தியன் 2 பட விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஷங்கருக்கும் லைகா நிறுவனத்துக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. மற்ற படங்களை இயக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளனர். தலையை சுற்றி இத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், தமிழக மக்களுக்காக நன்கொடை கொடுத்திருக்கிறார் என்றும் பாராட்டி வருகின்றனர்.

    இரண்டு படங்கள்

    இரண்டு படங்கள்

    இந்தியன் 2 படம் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், இயக்குநர் ஷங்கர் அடுத்ததாக டோலிவுட் நடிகர் ராம்சரணை வைத்து ஒரு படத்தையும், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் படத்தின் ரீமேக்கையும் செய்யவுள்ளார். இந்தியன் 2 படமும் அனைத்து பிரச்சனைகளையும் சுமூகமாக தீர்வு கண்டு வெளியாக வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

    English summary
    Director Shankar donates 10 lakhs rupees to CM relief fund. Tamil Cinema actors and Directors willing to contributes in the pandemic period.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X