twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தூத்துக்குடியே பற்றி எரியும் போது சிஎஸ்கே-யை பாராட்டி வாங்கிக் கட்டிக் கொண்ட ஷங்கர்!

    தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களுக்கு இயக்குனர் ஷங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    |

    Recommended Video

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி, இயக்குனர் ஷங்கர் மீது கொலவெறியில் மக்கள்!- வீடியோ

    சென்னை: ஸ்டெர்லைட் பிரச்சினை தொடர்பாக தூத்துக்குடியே கலவர பூமியாக உள்ள நிலையில், சிஎஸ்கே அணியைப் பாராட்டி இயக்குநர் ஷங்கர் டிவிட் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    முதல்வன், இந்தியன், எந்திரன் உள்ளிட்ட பிரம்மாண்ட வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஷங்கர். தற்போது ரஜினியை வைத்து 2.0 என்ற படத்தை இவர் இயக்கி வருகிறார். விரைவில் இந்தியன் இரண்டாம் பாகம் எடுக்க இருக்கிறார்.

    இந்நிலையில், நேற்றிரவு சிஎஸ்கே கிரிக்கெட் அணியைப் பாராட்டி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில் அவர், 'சிஎஸ்கே - தி அவெஞ்சர்ஸ்.. புல் ஆப் ஹீரோஸ்... வாட் எ மேட்ச்' எனத் தெரிவித்திருந்தார்.

    Director Shankar expresses condolence for Thoothukudi incident

    ஸ்டெர்லைட் பிரச்சினையால் தூத்துக்குடியே கலவர பூமியாக மாறியுள்ளது. நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் அங்கு 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தொடர்ந்து அங்கு அமைதியற்ற சூழல் நிலவுகிறது. இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சூழ்நிலையில் இயக்குநர் ஷங்கர் கிரிக்கெட் அணியைப் பாராட்டி டிவிட் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் இந்தப் பதிவிற்கு கண்டனங்களும் அதிகரித்தன. அதனைத் தொடர்ந்து தனது பதிவை அவர் உடனடியாக நீக்கினார்.

    அதன் தொடர்ச்சியாக இன்று காலை தூத்துக்குடி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அவர் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால், அவரை டிவிட்டரில் தொடர்ந்து வருபவர்கள், 'நேற்று கிரிக்கெட் பதிவிற்கு அடி பலமோ, இன்று தூத்துக்குடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளீர்களே' எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    Director Shankar expresses condolence for Thoothukudi incident

    டிவிட்டர் பதிவில் அவர், " தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சியையும், வலியையும் அளிக்கிறது. தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அடி மனதில் இருந்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

    ஆனால் அவரை பின்தொடர்பவர்கள், இதை ஏன் நேற்றே செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர். இரங்கல் தெரிவிக்கும் அதேவேளையில், இந்த சம்பவத்துக்கு காரணமான அரசை ஏன் கண்டிக்கவில்லை என்றும் அவர்கள் வினவியுள்ளனர்.

    English summary
    In his twitter page director Shankar has expressed his deepest condolence to families of Thoothukudi firing incident victims.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X