பாய்ஸ் படத்தால் மீண்டும் அடிவாங்கும் ஷங்கர்.. பசங்களை கெடுத்துட்டாரா?.. பிரசாந்த் ரங்கசாமி ட்வீட்!
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளியான 'பாய்ஸ்' படத்தால் பல வருடங்கள் கழித்து மீண்டும் ஷங்கர் சோஷியல் மீடியா நெட்டிசன்களிடம் அடி வாங்கி வருகிறார். சமீபத்தில் கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் பேருந்தில் சென்ற தீபக் என்பவர் தன்னை தகாத முறையில் உரசினார் என வீடியோ எடுத்து பெண் ஒருவர் வெளியிட்ட நிலையில், அந்த வீடியோ வைரலானது.
இதனால், மனவேதனைக்கு ஆளாகிய தீபக் தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீபக் அந்த பெண்ணை உரசவில்லை என்றும் அவரே வேண்டுமென்றே வீடியோ எடுத்து வெளியிட்டார் என்றும் இதனால் பரிதாபமாக ஒரு ஆணின் உயிர் பறிபோய் விட்டதாக பலரும் அந்த பெண் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினர். பரிதாபங்கள் யூடியூப் சேனல் வரை ட்ரோல் வீடியோக்கள் வெளியானது.

விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், அந்த வீடியோவை எடுத்து வெளியிட்ட ஷிம்ஜிதாவை காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுத்தது. ஜனவரி மாதம் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆண்கள் பல இடங்களில் பெண்களிடம் அத்துமீறும் காட்சிகளை 'பாய்ஸ்' படத்தில் ஷங்கர் வைத்துள்ளார் என நெட்டிசன்கள் தற்போது அவரை போட்டு துவைத்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் ரோஸ்ட்: போதைப் பொருள் புழக்கம் அதிகரித்தால் உடனடியாக லோகேஷ் கனகராஜ் தான் அதற்கு காரணம் என அவரை நெட்டிசன்கள் ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பித்து விடுவார்கள். அவரும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் Drug Free Society வேண்டும் என்பதற்காகத்தான் நான் அதுபோன்ற விஷயங்களை அட்ரஸ் பண்ணுகிறேன் என தெளிவாக கூறியுள்ளார். ஆனால், படங்களில் டாப் நடிகர்கள் ஸ்டைலா சிகரெட் பிடிப்பது, பாட்டில் பத்தாது அண்டாவ கொண்டா என பாடுவது போன்ற காட்சிகள் தான் இளைஞர்களை அதிகளவில் கெடுப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளும் குவிந்துக் கொண்டு தான் வருகின்றன.
மாட்டிக்கிட்டாரு ஷங்கர்: இந்தியன் 2 படத்தில் இருந்தே பாவம் இயக்குநர் ஷங்கரை தொடர்ந்து ரவுண்டு கட்டி ரோஸ்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், 23 ஆண்டுகள் முன்னதாக அவர் இயக்கிய பாய்ஸ் படத்தில் இடம்பெற்ற "எனக்கொரு கேர்ள் ஃபிரெண்ட் வேண்டுமடா" பாடலில் இடம்பெற்ற சில மோசமான காட்சிகளால் மீண்டும் மாட்டிக்கிட்டாரு ஷங்கர்.
ஆபாசத்தின் உச்சம்: இந்த காலத்தில் ஷங்கர் இப்படியொரு படத்தையோ காட்சிகளையோ எடுத்தால் அவ்வளவு தான் என நெட்டிசன்கள் ஷங்கரை ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர். மேலும், சித்தார்த், நகுல், தமன், பரத் மற்றும் மணிகண்டன் உள்ளிட்ட நடிகர்கள் அந்த படத்தில் பெண்களை கண்டபடி உரசுவது, பெண்களின் மார்பகங்களை பார்ப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்ற நிலையில், அதை ஷேர் செய்து ஷங்கரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
பிரசாந்த் ரங்கசாமி ட்வீட்: இப்போது மட்டுமல்ல படம் வெளியான சமயத்திலேயே இந்த படத்துக்கும் படத்தில் இடம்பெற்ற அந்த பாடல் காட்சிகளுக்கும் ஷங்கர் கடுமையான விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் சம்பாதித்தார். மவுண்ட் ரோட்டில் சித்தார்த் நிர்வாணமாக ஓடுவது போன்ற காட்சி தான் படத்தையே பெரிதாக ஓடவிடாமல் செய்து விட்டது என்றும் கூறுகின்றனர். வாலிப பருவத்தில் தவறான விஷயங்களை செய்யும் பாய்ஸ் எப்படி தங்களுக்குள் இருக்கும் இசை திறமையை கண்டறிந்து பெரியாளா மாறுகின்றனர் என்பது தான் அந்த படத்தின் கதை.
ஆதரவும் எதிர்ப்பும்: பலாத்கார காட்சியை இயக்குநர் காட்டிவிட்டால் அவர் மோசமானவர் ஆகிவிடுவாரா? தீவிரவாதிகள் கொல்வதை காட்டிவிட்டால் அவர் தீவிரவாதியாக மாறிவிடுவாரா? என பலரும் ஷங்கருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே போல இயக்குநர்கள் பொறுப்பை உணர்ந்து படக் காட்சிகளை எடுக்க வேண்டும் என்றும் சீரியஸ் விஷயங்களை ஜாலியான பாடல் மூலம் எப்படி காட்டலாம் என்றும் கண்டனங்களும் கிளம்பி வருகின்றன.


Click it and Unblock the Notifications











