Don't Miss!
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Finance
பள்ளி-க்கு 30 லட்சம், கல்லூரிக்கு 1 கோடி.. மிடில் கிளாஸ் பெற்றோர்கள் ஷாக்..!
- News
இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தர கூடாது என கட்சிகளுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
- Technology
கம்மி விலையில் 50MP கேமரா, 6000mAh பேட்டரியுடன் அறிமுகமான சூப்பர் போன்.!
- Lifestyle
செவ்வாய் 66 நாட்கள் ரிஷப ராசியில் இருப்பதால் இந்த ராசிக்காரர்களின் செல்வம் பெருகப் போகுது...
- Automobiles
மோதி பாத்திருவோம்... டாடாவின் வயிற்றில் புளியை கரைக்கும் மாருதி ஆல்டோ கார்! புதிய அவதாரத்தில் நாளைக்கு லான்ச்!
- Sports
ப்ளேயிங் 11ல் 5 ஓப்பனிங் வீரர்கள்.. ஜிம்பாப்வே தொடரில் வித்தியாசமான இந்திய அணி.. இதை கவனத்தீர்களா??
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
பிரம்மாண்ட பட்ஜெட்டுடன் கனவுப்படத்தில் களமிறங்கும் இயக்குநர் ஷங்கர்.. யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா?
சென்னை : இயக்குநர் ஷங்கர் எப்போதுமே பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர்.
இந்தியன் 2 படம் பாதியிலேயே நின்றுபோன நிலையில் தற்போது ராம்சரணை வைத்து இவர் படமியக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் சூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஒட்டு மொத்த இந்திய சினிமாவின் பெருமை இவர் தான்.. உச்சி குளிர்ந்த ப்ரியா பவானி ஷங்கர்!

இயக்குநர் ஷங்கர்
இயக்குநர் ஷங்கர் பிரம்மாண்டங்களின் இயக்குநர் என்று பெயர் வாங்கியவர். இவரது பல படங்கள் அதன் பிரம்மாண்டத்திற்காகவே சிறப்பான வரவேற்பை பெற்றன. கதையிலும், காட்சிகளிலும் கூட மிரட்டலான அம்சங்களை ஷங்கர் புகுத்துவார். இதனால் இவரது படங்கள் ஹாலிவுட் படங்களையே விஞ்சும் வகையில் அமைந்துவிடும்.

சூட்டிங் தடைபட்ட இந்தியன் 2
இவரது இந்தியன் படம் கமல் நடிப்பில் சிறப்பான வரவேற்பை பெற்ற படம். இதில் அப்பா -மகனாக கமல் நடித்திருப்பார். இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகி படத்தின் சூட்டிங்கும் நடத்தப்பட்டது. அப்போது சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட ஒரு விபத்து காரணமாக தற்போது சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

ராம்சரணுடன் படம்
இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. லைகா மற்றும் ஷங்கர் இடையிலான பிணக்குகள் தீர்க்கப்பட்டு விட்டதாகவும் விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தெலுங்கில் ராம்சரணை வைத்து தனது அடுத்தப்படத்தை துவக்கிவிட்டார் ஷங்கர். சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரன்வீர் சிங்கை இயக்கும் ஷங்கர்
இந்நிலையில் அடுத்ததாக பாலிவுட்டிலும் ரன்வீர் சிங்குடனும் அடுத்தப்படத்தில் கமிட்டாகியுள்ளார் ஷங்கர். அந்தப்படத்தின் சூட்டிங், ராம்சரணின் சூட்டிங்கை முடித்தப்பின்பு துவங்கும் என்று கூறப்படுகிறது. இதனிடையே தனது கனவுப்படமான சயின்ஸ் பிக்ஷன் கதையிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஷங்கர்.

ஷங்கரின் கனவுப்படம்
இதனிடையே நீருக்கடியில் ஏற்படும் நிகழ்வுகளை மையமாக கொண்டு அடுத்தப்படத்தை சயின்ஸ் பிக்ஷன் படமாக திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்தின் பட்ஜெட் மட்டுமே 1000 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இதில் ஹிருத்திக் ரோஷன் மற்றம் ராம்சரண் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.