Indian 2 movie: நாளை மீண்டும் துவங்கும் இந்தியன் 2 சூட்டிங்.. ரொமான்ஸ் பாடலை சூட் செய்யும் ஷங்கர்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் -ஷங்கர் காம்பினேஷனில் வெளியான இந்தியன் படம் மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில் தற்போது பல ஆண்டுகளை கடந்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கிய நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தப் படம் முடங்கியது. இந்நிலையில் கடந்த ஆண்டில் மீண்டும் தூசித்தட்டப்பட்ட இந்தப் படம் தற்போது இரண்டு பாகங்களாக ஒரே சமயத்தில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் மூன்றாவது பாகத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியன் 2 படத்தின் அடுத்தடுத்த பாடல்களை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்க இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார். இதற்கான சூட்டிங் நாளைய தினம் சென்னையில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. காதல் பாடலாக உருவாகவுள்ள இந்தப் பாடலின் சூட்டிங் தொடர்ந்து சில தினங்கள் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. முன்னதாக கமல்ஹாசனின் விக்ரம் படத்திற்கும் அனிருத் இசையமைத்திருந்தார். இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Director Shankar going to shoot Indian 2 movie song tomorrow with Siddharth & Priya bhavani shankar

நடிகர் கமல்ஹாசன்: கமல்ஹாசனின் அடுத்தடுத்த லைன் அப்கள் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்து வருகிறது. முன்னதாக அவரது நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் இந்தப்படம் கொடுத்திருந்தது. இந்த படத்தின் வெற்றி தயாரிப்பாளராகவும் நடிகராகவும் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது. இதையடுத்து தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அவர் அடுத்தடுத்து திட்டமிட்டு படங்களை அறிவித்து வருகிறார். இந்நிலையில் நடிகராக அவரது இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியன் 3 படம்: இந்தியன் 3 படமும் திட்டமிடப்பட்டு அந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படங்களை மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நடித்துக் கொடுத்துள்ளார் கமல்ஹாசன். சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் முதல் பாகம் மிகப் பெரிய ஹிட் கொடுத்தது. கமல்ஹாசன் சேனாபதி மற்றும் சந்துரு என இருவேறு கேரக்டர்களில் நடித்திருந்த இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் இருவரும் ஒரு கட்டத்தில் எதிரிகளாக நிற்கும் காட்சி அமைப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அந்த காலகட்டத்தில் இந்தப்படம் மிகவும் பிரம்மாண்டமாக ஏராளமான ரசிகர்களை கவரும் வகையில் அமைந்து வெற்றி படமாகவும் மாறியது.

ரொமான்ஸ் பாடல் சூட்டிங்: இந்நிலையில் தற்போது பல ஆண்டுகள் கழித்து இந்தப்படத்தின் இரண்டாவது பாகம் மற்றும் மூன்றாவது பாகமும் உருவாகியுள்ளது. இந்த இரு படங்களின் சூட்டிங் நிறைவடைந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தின் பாடல் காட்சியை இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார். நாளைய தினம் சென்னையில் துவங்க உள்ள இந்த பாடல் காட்சியில் நடிகர் சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். காதல் பாடலாக உருவாக உள்ள இந்த பாடல் காட்சியை மிகவும் பிரம்மாண்டமாக இயக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கமலின் அடுத்தடுத்த படங்கள்: இந்தப்படம் கோடை கொண்டாட்டமாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியன் 3 படம் டிசம்பர் வெளியீடாக ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்திலும் கமிட் ஆகியுள்ளார். இந்த வயதிலும் மிகவும் சுறுசுறுப்புடன் அடுத்தடுத்த படங்களை வித்தியாசமான ஜானர்களில் கொடுத்து வரும் கமல்ஹாசன் இளைய தலைமுறையினருக்கு உத்வேகத்துடன் ஆச்சரியத்தையும் பரிசளித்து வருகிறார்.

தயாரிப்பாளர் கமல்ஹாசன்: மேலும் தயாரிப்பாளராகவும் தற்போது அவரது தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் படம் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதனிடையே அடுத்ததாக எஸ்டிஆர் 48 படத்தில் சிம்பு கமிட் ஆகியுள்ளார். வரலாற்று கதைக்களத்தில் உருவாகவுள்ள இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X