டாக்டர் படம் நல்ல சிரிப்பு மருந்து... டைரக்டர் ஷங்கர் பாராட்டு
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்றைய தினம் உலகெங்கிலும் டாக்டர் படம் ரிலீசாகியுள்ளது.
Recommended Video
படம் மிகச்சிறந்த விமர்சனங்களையும் வசூலையும் குவித்துள்ளது.
பலரும் படம் குறித்த பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் சங்கரும் ட்விட்டர் மூலம் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

டாக்டர் படம்
நடிகர் சிவகார்த்திகேயன் லீட் ரோலில் நடித்து வெளிவந்துள்ள படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நேற்றைய தினம் படம் உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. மேலும் வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.

நல்ல விமர்சனங்கள்
படத்தை பார்த்தவர்கள் அனைவரும் நல்ல விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சதீஷ் உள்ளிட்டவர்களும் ட்விட்டர் மூலம் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெறவும் வாழ்த்தியுள்ளனர். ரசிகர்களும் சிறப்பான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் சங்கர் பாராட்டு
இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் படம் திரையிடப்பட்டு வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இயக்குநர் சங்கர் டாக்டர் படம் குறித்த தனது பாராட்டுக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த கொரோனா சமயத்தில் மிகச்சிறந்த சிரிப்பு மருந்தாக படம் வெளிவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இயக்குநர் நெல்சனுக்கு பாராட்டு
மேலும் இத்தகைய படத்தை கொடுத்த இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு அவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இத்தகைய குடும்ப என்டர்டெயினர் படத்தை கொடுத்த சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் உள்ளிட்ட படக்குழுவினருக்கு அவர் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நன்றி
மீண்டும் தியேட்டரில் படம் பார்க்கும் வாய்ப்பை அளித்ததற்கும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனக்கு மிகவும் பிடித்த டைரக்டர் சங்கரிடம் இருந்து இத்தகைய பாராட்டு கிடைத்ததற்கு நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை மறக்க முடியாத படமாக அவரது பாராட்டு ஆக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெல்சன் நெகிழ்ச்சி
மேலும் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் சங்கரின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சங்கரின் பாராட்டு தனக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் இந்தப் படத்தை என்ஜாய் செய்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவரிடம் மேலும் இத்தகைய பாராட்டுக்களை பெற தான் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











