twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மின்மினி படத்திற்காக காத்திருக்கும் ஷங்கர்.. ஹலிதா ஷமீமை மனம் திறந்து பாராட்டினார் !

    |

    சென்னை : இயக்குனர் ஷங்கர் அளித்துள்ள ஒரு பேட்டியில், இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கி வரும் மின்மினி படத்தை திரையில் காண மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து இருப்பதாக கூறியுள்ளார்.

    பிரமாண்ட படங்களுக்கும் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு பெயர் போன இயக்குனர் ஷங்கர் இந்திய அளவில் மிகப்பெரிய ஒரு இயக்குனராக வலம் வருகிறார்.

    இந்நிலையில் இவரது இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 மிக பிரம்மாண்டமாக உருவாகி பலரையும் எதிர்பார்க்க வைத்துள்ளது. சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றுசமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    நம்மளோட பாதுகாப்புக்காக உழைக்கிற அவங்களுக்கு... இயக்குனர் ஷங்கர் நெகிழ்ச்சி! நம்மளோட பாதுகாப்புக்காக உழைக்கிற அவங்களுக்கு... இயக்குனர் ஷங்கர் நெகிழ்ச்சி!

    15 வருட கொண்டாட்டம்

    15 வருட கொண்டாட்டம்

    ஓரிரு நாட்களுக்கு முன்பு 15 வருட அந்நியன் வெற்றியை கொண்டாடும் விதமாக இவர் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் இவருக்கு கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு இவர் தற்போது தயாராகி வரும் மின்மினி என்ற படம் தான் மிகவும் எதிர்பார்க்கும் ஒன்றாக உள்ளது என மனம் திறந்துள்ளார்.

    அனைத்து மொழி

    அனைத்து மொழி

    சென்ற ஆண்டு தமிழில் வெளியான சில்லுக் கருப்பட்டி படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது மட்டுமில்லாமல் இந்த படம் அனைத்து மொழி பேசும் மக்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. ஐந்து வெவ்வேறு கதைகளை எடுத்துக் கொண்டு பிரமாதமாக திரைக்கதை அமைத்து அந்த ஐந்து கதைகளிலும் தனது நேர்த்தியை அட்டகாசமாக கொடுத்து இருந்தார் இயக்குனர் ஹலிதா ஷமீம்.

    மின்மினி

    மின்மினி

    பல்வேறு பாராட்டுகளையும் பல்வேறு விருதுகளையும் பெற்று வந்த இந்த படம் மூலம் இவர் தெலுங்கு, மலையாளம் என அனைத்து திரையுலகினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையில் சில்லுக்கருப்பட்டி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் தற்போது இயக்கிவரும் படம் மின்மினி.

    ஐந்தாண்டு

    ஐந்தாண்டு

    இந்த படத்திற்கான சிறப்பம்சமே யாரும் இதுவரை செய்யாத ஒன்றாகும். முழுக்க முழுக்க சிறுவர்களை கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இந்த படம் முதற் பாதி மற்றும் பிற்பாதியில் சிறுவர்களின் ஐந்தாண்டு முன் பின் என ஆண்டு இடைவெளியில் சிறுவர்களை காட்ட இருக்கும் இந்த படம் முதற்பாதி ஏற்கனவே 5 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட நிலையில் இதன் இரண்டாம் பாதி அந்த சிறுவர்கள் 5 ஆண்டில் கொஞ்சம் வளர்ந்த நிலையில் தற்போது உருவாகி வருகிறது.

    புதிய முயற்சி

    புதிய முயற்சி

    இவ்வாறு ஒரு கதையின் ஓட்டத்திற்கு ஐந்தாண்டு காலங்கள் சிறுவர்கள் வளரும் வரை இவர் காத்திருந்து இப்போது மின்மினி படத்தின் பிற்பகுதியை எடுத்து வருகிறார். திரையுலகில் பலரும் இதை புது டெக்னாலஜி மூலமோ அல்லது சிறுவர்களின் அதே சாயலில் இருக்கும் மற்ற சிறுவர்களை வைத்து இதுவரை இயக்கி வரும் இயக்குனர்களுக்கு மத்தியில். ஹலிதா ஷமீமின் இந்த முயற்சி பலரையும் பாராட்ட வைத்து வந்த நிலையில் இதை அறிந்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஹலிதா ஷமீமை புகழ்ந்து பாராட்டியது மட்டுமல்லாமல் இந்த படம் வெளியாவதை எதிர்நோக்கி காத்திருப்பதாக இந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

    இம்பிரஸ்

    இம்பிரஸ்

    அந்நியன் 15-வது வருட கொண்டாட்டத்தின் நேர்காணலில் 2005 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கரை இம்பிரஸ் செய்த ஐந்து இயக்குனரின் பெயரை கேட்டதற்கு அப்போது இளம் இயக்குனர்களாக இருந்த பாலா, ஏ ஆர் முருகதாஸ், கௌதம் மேனன், லிங்குசாமி, தரணி என சொல்லி இருந்தார்.

    ஐந்து இயக்குனர்கள்

    ஐந்து இயக்குனர்கள்

    15 ஆண்டுகளுக்குப் பின் இப்போது உள்ள இளம் இயக்குனர்களில் உங்களை இம்பிரஸ் செய்த ஐந்து இயக்குனர்களின் பெயரை கேட்டதற்கு " வெற்றிமாறன் ரொம்ப பிரமாதமா பண்றார், லோகேஷ் கனகராஜ், அருவி டைரக்டர் அருண் பிரபு ரொம்ப நல்லா பண்றார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படத்தை எடுத்த வினோத்தோட ஒர்க் நல்லா இருக்கு, சில்லுக்கருபட்டி பண்ணாங்களே ஹலிதா ஷமீம் அவங்க ஒர்க் சூப்பரா இருந்தது".

    அஞ்சு வருஷம் வெயிட்

    அஞ்சு வருஷம் வெயிட்

    "இப்போ சின்ன பசங்கள ஒரு குறிப்பிட்ட வாயசுல ஷூட் பண்ணிட்டு கதைக்கு அவங்க வளர்ந்து இருக்கணும்னு என்பதற்காக உண்மையாகவே அவங்க வளர்ற வரைக்கும் அஞ்சு வருஷம் வெயிட் பண்றாங்கன்னு ஒரு பேட்டியில் சொல்லி இருந்தாங்க, அது ரொம்பவே சுவாரஸ்யமாகவும் புதுசாகவும் இருந்தது. படத்தோட பெயர் கூட மின்மினி'னு நினைக்கிறேன். அந்தப் படத்துக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்".

    ஷங்கரின் எதிர்பார்ப்பு

    ஷங்கரின் எதிர்பார்ப்பு

    இவ்வாறு அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார் இயக்குனர் ஷங்கர். ஏற்கனவே மின்மினியை பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது ஷங்கரின் வார்த்தைகள் இன்னும் அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

    English summary
    Director Shankar has said that, I am waiting to the film minmini
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X