ஷங்கர் மகள் திருமண வரவேற்பு.. தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோனை சந்தித்து வாழ்த்து பெற்ற இயக்குநர்!

சென்னை: இயக்குநர் ஷங்கர் தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோனை நேரில் சந்தித்து ஆசி பெற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

இயக்குநர் ஷங்கர் மற்றும் அவரது மனைவி இருவரும் கே.டி. குஞ்சுமோனை நேரில் சந்தித்து தனது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கே.டி. குஞ்சுமோன் ஜென்டில்மேன் 2 படத்தை தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

ஷங்கரின் முதல் பட தயாரிப்பாளர்

ஷங்கரின் முதல் பட தயாரிப்பாளர்

ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஷங்கர். அந்த படத்தை தயாரித்தவர் கே.டி. குஞ்சுமோன். சமீபத்தில் ஜென்டில்மேன் 2 படத்தை தயாரிக்கப் போவதாக மிகப்பெரிய அறிவிப்பை கே.டி. குஞ்சுமோன் வெளியிட்டார். ஆனால், இன்னமும் அந்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்பதை அறிவிக்கவில்லை. அர்ஜுன் அந்த படத்தில் நடிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. நாயகியாக நயன்தாரா சக்கரவர்த்தி நடிக்க உள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார் கே.டி. குஞ்சுமோன்.

பேச்சுவார்த்தை இல்லை

பேச்சுவார்த்தை இல்லை

சில வருடங்களாக இயக்குநர் ஷங்கருக்கும் கே.டி. குஞ்சுமோனுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும் ஜென்டில்மேன் 2 படத்தை இயக்க கோரிக்கை விடுத்த நிலையில், ஷங்கர் அதை ஏற்காதது தான் பிரச்சனை என்கின்றனர். இந்நிலையில், தற்போது அந்த பிரச்சனையை சரி செய்ய இயக்குநர் ஷங்கர் முடிவு செய்துள்ளார்.

மனைவியுடன் சென்று ஆசி பெற்றார்

மனைவியுடன் சென்று ஆசி பெற்றார்

இயக்குநர் ஷங்கர் தனது மனைவியுடன் கே.டி. குஞ்சுமோன் இல்லத்திற்கு சென்று ஆசி பெற்றுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. மேலும், ஒரு சந்தோஷமான நிகழ்ச்சிக்காகவே இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக கூறுகின்றனர்.

முதல் பத்திரிகை

முதல் பத்திரிகை

இயக்குநர் ஷங்கர் தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை வரும் மே 1ம் தேதி சென்னையில் உள்ள பெரிய திருமண மண்டபத்தில் கோலாகலமாக நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்கான முதல் பத்திரிகையை கே.டி. குஞ்சுமோனை நேரில் சந்தித்து கொடுத்துள்ளார். தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் ஷங்கரை பார்த்ததும் ரொம்பவே சந்தோஷமடைந்துள்ளார்.

அதிதி ஷங்கருக்கா

அதிதி ஷங்கருக்கா

ஷங்கர் மகளின் திருமண வரவேற்பு என்றதுமே ஒட்டுமொத்த கோலிவுட்டும் விருமன் படத்தில் நாயகியாக அறிமுகமாகவுள்ள அதிதி ஷங்கருக்கு திருமணமா? என கேள்விகள் எழுப்பி உள்ளனர். ஆனால், கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்ற ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தான் மே 1ம் தேதி கோலாகலமாக நடைபெற போகிறதாம்.

Recommended Video

Director Shankar-க்கு காமெடியனாக நடிக்க வாய்ப்பு கொடுத்த SA Chandrasekhar | Part 2 | Filmibeat Tamil
திருமண வரவேற்பு

திருமண வரவேற்பு

கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் கொரோனா காலத்தில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கரின் திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பல பிரபலங்களை அழைத்து பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த ஷங்கர் ஏற்பாடு செய்துள்ளாராம். நடிகர் ரஜினிகாந்த், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப் போகிறாராம் ஷங்கர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X