twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு இன்று பிறந்தநாள்.. இணையத்தில் தெறிக்கும் வாழ்த்து செய்தி!

    |

    சென்னை: செய்வன திருந்தச் செய்ய வேண்டும் என்ற ஒற்றை மந்திரத்தை கொண்டு உலக அளவில் சிறந்த இந்திய இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் இயக்குனர் ஷங்கர்.

    பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்குவதற்கு பெயர்போன இவர் தன்னுடைய திரைக் கால வாழ்க்கையை ஒரு காமெடியனாக ஆரம்பித்தார்.

    தனது ஒவ்வொரு படைப்பிலும் ஒருபடி மேலே இருக்க வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருக்கும் ஷங்கர் அதை தனது ஒவ்வொரு படங்களிலும் நிரூபித்துக் கொண்டு வருகிறார். இவ்வாறு இந்திய அளவில் மிகச் சிறந்த இயக்குனராக வலம் வரும் இயக்குனர் ஷங்கர் ஆகஸ்ட் 17ஆம் தேதியான இன்று 57 வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களும் மற்றும் திரை பிரபலங்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    வாய்ப்புகள் கிடைக்க

    வாய்ப்புகள் கிடைக்க

    சாதாரண ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த இயக்குனர் ஷங்கர், பல்வேறு வேலைகளை செய்து பின் ஒரு நாடக கோட்டையில் காமெடியனாக தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தார். சிறுவயதிலிருந்தே தனக்கு இருக்கும் நடிக்கும் திறன் மற்றும் மிமிக்கிரி ஆர்வத்தை அங்கே வெளிப்படுத்தும் போது நடிக்க வாய்ப்புகள் கிடைக்க அதை பயன்படுத்திக்கொண்டு அந்த நாடகக் கம்பெனியில் இருந்து கொண்டே தமிழ் சினிமாவில் மிகப்பெரும் காமெடி நடிகனாக உருவாக வேண்டும் என்று லட்சியம் கொண்டு ஒவ்வொரு கதவாக தட்ட யாரும் அவரை சீண்டிய பாடு இல்லை.

     உதவி இயக்குனர் வேலை

    உதவி இயக்குனர் வேலை

    சின்ன சின்ன காமெடிகளில் தலைகாட்டிக்கொண்டு இருக்க ஒரு முறை இயக்குனர் எஸ்.எ.சந்திரசேகர் நாடகம் பார்க்க வந்து இவரை கவனிக்கிறார். என்னுடைய அலுவலகத்தில் வேலை இருக்கிறது செய்கிறாயா? என்று அவர் கேட்க உடனே தலையாட்டி அங்கே வேலைக்கு சேர்ந்து எப்படியாவது இவரது படங்களில் நடித்து மிகப்பெரும் காமெடியனாகி விட வேண்டும் என்று எண்ணம் இவருக்கு இருந்தது. ஆனால் கிடைத்ததென்னவோ உதவி இயக்குனர் வேலை.

    பாதகமாக்கிக்கொள்ள

    பாதகமாக்கிக்கொள்ள

    தனக்கு முன்பிருந்தவர்கள் தனக்கு பின்பு வந்தவர்கள் என அனைவருமே தனித்தனியாக படம் எடுக்க முயற்சிக்க இவருக்கு மட்டும் அந்த ஆர்வம் வராமலேயே இருந்தது. அது தேவையும் இல்லை என்று நினைத்திருக்கிறார். காரணம் எஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த அரவணைப்பு, அடுத்து மாதாமாதம் கிடைக்கும் சம்பளம் எக்காரணத்தை கொண்டும் அதை பாதகமாக்கிக்கொள்ள விரும்பியிருக்கவில்லை.

    கம்ப்ளீட் கமர்ஷியல்

    கம்ப்ளீட் கமர்ஷியல்

    ஒரு கட்டத்தில் இவருடன் வேலை செய்த பவித்ரன் படத்தை ஆரம்பிக்கிறார் அவருடைய படத்தில் இணை இயக்குனராக வேலை செய்து வாய்ப்புகளும் தனியாக தேடிக்கொண்டு இருக்க, பள்ளி நாட்களிலிருந்தே நடேசன் பார்க்கில் தான் அவரது பயணம் தொடங்கி இருக்கிறது என்பதால் அங்கேயே தினமும் அமர்ந்து கதையை உருவாக்குகிறார். இயக்குனர் மகேந்திரனின் படங்களை போல உணர்ச்சிகுவியலாக ஒரு சப்ஜக்ட்டை உருவாக்குகிறார், ஆனால் அதை யாரும் அப்போது இவரிடம் விரும்பவில்லை. எனவே கம்ப்ளீட் கமர்ஷியல் தான் வேண்டும் என நண்பர்கள் சொல்ல ஜென்டில்மேன் கதையை அதே நடேசன் பார்க்கில் அமர்ந்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்குகிறார்.

    தான் ஒரு இயக்குனர்

    தான் ஒரு இயக்குனர்

    தனது முதல் திரைப்படத்தை தயாரிக்க எந்தெந்த தயாரிப்பாளர்களிடமோ வாய்ப்பை தேடி அலைய யாரும் கை கொடுக்காமல் சோர்ந்துபோய் எஸ் ஏ சந்திரசேகர் இடமே மீண்டும் சரண்டர் ஆகிவிடலாம், சாப்பாட்டிற்கும் வேலைக்கும் எந்த பாதகமும் இருக்கப்போவதில்லை என நினைத்து அங்கே போக ஷங்கர் முடிவெடுக்க, கடைசியில் இவர் ஏற்கனவே பவித்ரனுடன் வேலை செய்த இரண்டு படங்களின் தயாரிப்பாளரான குஞ்சுமோன் இவரை அழைத்து வாய்ப்பு கொடுக்க, தான் நிஜமாகவே ஒரு காமெடியன் அல்ல, தான் ஒரு இயக்குனர் என்பதை அவர் அப்போதுதான் உணர்கிறார்.

    எஸ் ஏ சந்திரசேகர் தான் காரணம்

    எஸ் ஏ சந்திரசேகர் தான் காரணம்

    ஒரு சினிமாவிற்கு புரோகிராம் செய்வது, ஷெட்யூல் போடுவது, பட்ஜட் எழுதுவது போன்றவை தான் மிக முக்கியம். அதுவே அந்த படத்தின் மொத்தகட்டமைப்பை தீர்மானிக்கும் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அதில் கில்லாடி. மேலும் தன்னிடம் வேலை செய்யும் எல்லா இயக்குனர்களுக்கும் அதை திறமையாக சொல்லிக் கொடுத்து விடுவார். ஷங்கர் அவரிடமிருந்து அதை திறமையாக கற்றவர் மட்டுமல்ல அவர் வேலைசெய்த போது சில படங்களுக்கு அவரைவிட சிறப்பாக எழுதி கொடுத்து அசத்தியவர். அந்த கலையை அங்கே கற்றதால் தன்னுடைய வெற்றிக்கு எப்போதும் எஸ் ஏ சந்திரசேகர் தான் காரணம் என்று எப்போதும் பேசுவார்.

    இவரது அடையாளம்

    இவரது அடையாளம்

    "செய்வன திருந்தச் செய்ய வேண்டும்" என்பதை தாரக மந்திரமாகக் கொண்ட ஷங்கர் காமெடியனாக தான் இருப்பேன் என்று பிடிவாதமாக முயற்சி செய்திருந்தாலும் பிரம்மாண்ட இயக்குனர் என்ற ஒன்றே இவரது அடையாளம். அவ்வாறு இவர் இயக்கிய "ஜென்டில்மேன்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய இவரின் அடுத்த திரைப்படத்தை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

    காதலன் திரைப்படம்

    காதலன் திரைப்படம்

    இவரின் இரண்டாவது திரைப்படமான "காதலன்" வெளியாக, ஜென்டில்மேன் திரைப்படத்தை பார்த்த பலருக்கும் காதலன் திரைப்படம் மிகப்பெரிய ஏமாற்றத்தையே அளிக்கும் வகையில் விமர்சனங்கள் இருந்திருந்தாலும், இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது.

    அதிக நேர சிஜி காட்சிகள்

    அதிக நேர சிஜி காட்சிகள்

    இவ்வாறு படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கி வந்த ஷங்கர் தமிழ் சினிமாவில் யாரும் முயற்சிக்காத புது புது யுக்திகளை தன்னுடைய படங்களில் கொண்டு வர ஆரம்பித்தார். அவ்வாறு உருவான "ஜீன்ஸ்" திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை கொடுத்தது மட்டுமல்லாமல் ஜீன்ஸ் படம் வெளியான போது ஜுராசிக் பார்க் படத்தை தோற்கடித்து அதிக நேர சிஜி காட்சிகள் நிறைந்த படம்னு ரெக்கார்ட் செய்தவர்.

    ஹாலிவுட் தரத்தில்

    ஹாலிவுட் தரத்தில்

    இவ்வாறு ஹாலிவுட் திரைப்படங்களை போன்று இந்திய படங்களை தரத்தை உயர்த்த வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருந்து ஷங்கர் "எந்திரன்" என்ற மாபெரும் பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்கி உலக அளவில் பலரையும் வியக்க வைத்தார். இந்திய சினிமாவில் அதுவரை யாரும் பார்த்திராத வகையில் ஹாலிவுட் தரத்தில் உருவாகியிருந்த எந்திரன் திரைப்படம் பல்வேறு வசூல் சாதனைகளை செய்து மிகப்பெரிய வெற்றியடைந்தது.

    பிரம்மாண்ட படைப்பு

    பிரம்மாண்ட படைப்பு

    எந்திரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைய, இவரின் சிந்தனைகளும் படத்திற்கு படம் ஒரு படி மேலே போய் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது. அவ்வாறு உருவான அசாத்திய சிந்தனையே தற்பொழுது ஐ, 2.0, இந்தியன் 2 என இவரது பிரம்மாண்ட படைப்புகள் தொடர்ந்து அனைவரின் புருவங்களையும் உயர்த்த வைத்துள்ளது.

    பிறந்தநாள்

    பிறந்தநாள்

    இந்திய அளவில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்குவதில் வல்லவராக திகழ்ந்து வரும் இயக்குனர் ஷங்கர், பல்வேறு தரமான திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருந்து வரும் இயக்குனர் ஷங்கர் ஆகஸ்ட் 17 ஆம் தேதியான இன்று தனது 57 வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி, உலகெங்கிலுமுள்ள இவரது ரசிகர்களும் பல்வேறு திரைப்பிரபலங்களும் இவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு கொண்டாடி வருகின்றனர்.

    English summary
    Director Shankar is celebrating his birthday today
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X