சர்ச்சையான அந்நியன் இந்தி ரீமேக்... ஆனாலும் நாங்க விடமாட்டோம்ல!

மும்பை : நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை எடுக்க இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் சங்கர் இடையே கதை உரிமை குறித்து மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து இந்த ரீமேக் முடிவை இயக்குநர் ஷங்கர் கைவிட்டு, மற்றொரு திட்டத்தை கையில் எடுத்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர்

இயக்குநர் ஷங்கர்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து பிரம்மாண்டமான அளவில் எடுக்கப்பட்ட படம் அந்நியன். இந்தப் படத்தில் விக்ரம் மிரட்டியிருப்பார். அம்பி, அந்நியன் மற்றும் ரெமோவாக மாறி வித்தியாசமான கெட்டப்புகளில் அவரது நடிப்பில் சிறப்பான வரவேற்பை பெற்றது. படமும் நல்ல வசூலை வாரிக் குவித்தது.

அந்நியன் ரீமேக்

அந்நியன் ரீமேக்

இந்நிலையில் இந்தப் படத்தின் ரீமேக்கை இந்தியில் எடுக்க இயக்குநர் ஷங்கர் முடிவெடுத்து அதற்கான பணிகளில் ஈடுபட்டார். ரன்வீர் சிங்கிடம் கதைவிவாதம் மேற்கொள்ளப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டன. ஆனால் அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஷங்கர் இடையில் மோதல் ஏற்பட்டது.

புதிய திட்டம்

புதிய திட்டம்

இருவரும் கதை உரிமை தன்னிடம் உள்ளதாக மல்லுகட்டும் நிலையில் இந்த மோதல் முடிவுக்கு வராமல் நீண்டது. இதையடுதது இந்த ரீமேக் முடிவை தற்போது ஷங்கர் கைவிட்டுள்ளார். மேலும் ரன்வீர் சிங்கிடம் புதிய கதை ஒன்றை கூறி ஒப்புதல் வாங்கியுள்ளர். இந்தப் படத்தின் பணிகள் விரைவில் துவங்கவுள்ளன.

ராம்சரணை இயக்கும் ஷங்கர்

ராம்சரணை இயக்கும் ஷங்கர்

படத்தில் கியாரா அத்வானி ரன்வீருக்கு ஜோடியாகவுள்ளார். தற்போது ராம்சரண் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வரும் ஷங்கர், அந்தப் படத்தை முடித்துவிட்டு ரன்வீர் சிங்கின் படத்தின் பணிகளை துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராம்சரணை வைத்து ஷங்கர் முதல்முறையாக இயக்கிவரும் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

புதிய திட்டத்தில் ஷங்கர்

புதிய திட்டத்தில் ஷங்கர்

ஏற்கனவே பாலிவுட்டில் ஜென்டில்மேன், முதல்வன் ஆகிய படங்களை ரீமேக் செய்துள்ளார் ஷங்கர். இந்தவகையில் அந்நியன் படமும் சிறப்பாக எடுக்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த படம் கைவிடப்பட்டுள்ளது. ஆயினும் புதிய படத்திற்கு மாற்றாக எடுக்கப்படும் புதிய படம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X