போட்ரா வெடிய.. இந்தியன் 2 Vs கேம் சேஞ்சர்.. ஒரே ட்வீட்டில் இரண்டு அப்டேட் கொடுத்த ஷங்கர்!

சென்னை : இயக்குநர் ஷங்கர் ஒரே ட்வீட்டில் இரண்டு படங்களின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

ராம்சரண் தேஜா நடித்து வரும் கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் 2 என்ற இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார்.

இரண்டு படங்களின் படப்பிடிப்புகளையும் ஷங்கர் சும்மா பம்பரமாக சுற்றி சுற்றி எடுத்து வருகிறார்

Director shankar mass update of game changer and indian 2

விறுவிறுப்பான படப்பிடிப்பு : இந்தியன் 2 படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் கிரேன் சரிந்த விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகள் எல்லாம் ஒருவழியாக முடிந்து, தற்போது இந்த படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர்.

பழமையான ரயில் நிலையில் : சமீபத்தில், இந்த படத்தின் ஷூட்டிங் தென் ஆப்பிரிக்கா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் நடந்தது. மேலும், தென் ஆப்பிரிக்காவில் 100 ஆண்டுகால பழமையான ரயில் நிலையம் ஒன்றில் முக்கியமானக் காட்சிகளை இயக்குனர் ஷங்கர் படமாக்கினார். இந்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் பேசப்படும் என சொல்லப்படுகிறது.

Director shankar mass update of game changer and indian 2

இறுதிகட்ட படப்பிடிப்பு : இதையடுத்து இந்தியன் 2 படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங்குக்கான வேலைகள் சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. இங்கு இறுதிகட்ட ஷூட்டிங்கை படமாக்கும் ஷங்கர் அதோடு மொத்த படத்தையும் முடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கேம் சேஞ்சர் : ஒருபுறம் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ராம்சரணின் 15வது படமான கேம் சேஞ்சர் படத்தையும் இயக்கி வருகிறார். கேம் சேஞ்சர் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் 23ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்ஜே சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

Director shankar mass update of game changer and indian 2

இந்தியன் 2 Vs கேம் சேஞ்சர் : இந்நிலையில், ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், கேம் சேஞ்சர் படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்றும், கிளைமாக்ஸ் காட்சிகள் அபாரமாக வந்துள்ளதாகவும் இனி அடுத்ததாக 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அந்த படத்தின் சில்வர் புல்லட் காட்சிகளின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X