ப்பா.. எப்படி இருக்காரு பாருங்க.. திடீரென ரஜினிகாந்தை சந்தித்த ஷங்கர்.. என்ன விஷயம் தெரியுமா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்தை திடீரென இயக்குநர் சந்தித்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதன் முதலாக இணைந்து சிவாஜி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர், எந்திரன், 2.0 என மொத்தம் மூன்று படங்களில் இவர்களது பிரம்மாண்ட கூட்டணி இடம்பெற்றது.

இந்நிலையில், இந்த சந்திப்புக்கான காரணத்தையும் இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்ட ர்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சிவாஜி ரிலீசாகி

சிவாஜி ரிலீசாகி

ஏவிஎம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரேயா, விவேக் நடிப்பில் வெளியான சிவாஜி படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதன் 15 வருட கொண்டாட்டத்தை காலை முதலே கொண்டாடி வருகின்றனர். ஏவிஎம் நிறுவனம் சிவாஜி படத்தின் பிரத்யேக மேக்கிங் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

சிவாஜி மேக்கிங் வீடியோ

சிவாஜி மேக்கிங் வீடியோ

அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சானே.. பாடலில் நடிகை ஸ்ரேயாவை தூக்கிக் கொண்டு ரோப் கயிற்றின் உதவியோடு சும்மா பறந்து சுற்றி எதிரிகளை துவம்சம் பண்ணும் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு மாஸ் காட்டி வருகிறது ஏவிஎம் நிறுவனம். சிவாஜி படம் வந்து 15 வருஷம் ஆகிடுச்சா என ரசிகர்கள் எல்லாம் வாயை பொளந்து வருகின்றனர்.

ரஜினியை சந்தித்த ஷங்கர்

ரஜினியை சந்தித்த ஷங்கர்

இந்நிலையில், சிவாஜி படத்தின் 15 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டுத் தான் தற்போது நடிகர் ரஜினிகாந்தை இயக்குநர் சந்தித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு ட்வீட் போட்டுள்ளார். நடிகர் ரஜினியின் ரீசன்ட் க்ளிக்கை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளனர்.

என்னவொரு எனர்ஜி

என்னவொரு எனர்ஜி

ஜீன்ஸ் மற்றும் டிசர்ட் அணிந்து இயக்குநர் ஷங்கர் நிற்க, அவர் அருகே வெள்ளை நிற வேட்டி, சட்டையில் எளிமையின் உருவமாக ரஜினிகாந்த் இருப்பதை பார்த்து ரசிகர்கள் வியந்து போயுள்ளனர். மேலும், இயக்குநர் ஷங்கர் தனது கேப்ஷனில் உங்க எனர்ஜி, அன்பு மற்றும் பாசிட்டிவ் ஆரா என்னுடைய நாளை சிறப்பாக்கி விட்டது என பதிவிட்டுள்ளார்.

இன்னொரு படம்

இன்னொரு படம்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படங்கள் எல்லாமே தமிழ் சினிமாவுக்கே பெருமை சேர்த்த படங்களாக மாறியுள்ள நிலையில், மீண்டுமொரு இவர்கள் இருவரும் இணைய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து இருக்கின்றனர். அதற்கான சந்திப்பாக இது இருக்க வேண்டும் என்றும், இத்தனை ஆண்டுகள் சிவாஜி படம் வெளியானதை கொண்டாடாமல் இருந்த நிலையில், ஏவிஎம் மற்றும் ஷங்கர் என அனைவரும் இணைந்து கொண்டாட காரணம் ஏதாவது அடுத்த சர்ப்ரைஸ் காத்திருக்கிறதா? என்கிற கேள்வியை எழுப்பி உள்ளது.

ஷங்கர் மகள் செல்ஃபி

ஷங்கர் மகள் செல்ஃபி

இயக்குநர் ஷங்கர் மட்டுமின்றி ஷங்கரின் மகள் அதிதி ஷங்கரும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். ரஜினியுடன் அவர் எடுத்துக் கொண்ட க்யூட்டான செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு #15yearsofSivaji அதே பாஸ் உடன் என கேப்ஷன் போட்டு தெறிக்கவிட்டுள்ளார். கார்த்தி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள விருமன் படத்தின் மூலம் இவர் கோலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X