மூன்று பாகங்களாக உருவாகும் வேள்பாரி படம்.. யார் நடிக்கிறாங்க.. ஷங்கர் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா?

சென்னை: நடிகர் கமல்ஹாசன், சித்தார்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தியன் 2 படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் ஷங்கர். நாளைய தினம் இந்தப் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷன்களில் சர்வதேச அளவில் ஷங்கர், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

இந்தப் படத்திற்கிடையில் தெலுங்கில் ராம்சரணின் கேம் சேஞ்சர் படத்தையும் இயக்கி முடித்துள்ளார் ஷங்கர். இந்தப் படமும் இந்த ஆண்டு இறுதியிலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியன் 2 படத்தின் பிரமோஷன்களில் பேசியுள்ள கமல்ஹாசன் அவரது கனவு பிராஜெக்ட்டான வேளபாரி படம் குறித்து பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

Shankar Indian 2 movie Kamal haasan tamil cinema

இந்தியன் 2 படம்: நடிகர் கமல்ஹாசன் -ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் இந்தியன் 2. 28 ஆண்டுகளுக்கு பிறகு கமல் -ஷங்கர் கூட்டணி மீண்டும் இந்தியன் 2 படத்தில் இணைந்துள்ளது. கடந்த 1996ம் ஆண்டில் இந்தியன் படம் வெளியாகி மிகப்பெரிய கவனத்தையும் வரவேற்பையும் வெற்றியையும் கொடுத்தது. ஊழலுக்கு எதிரான பயணத்தை சேனாபதி கேரக்டர் மூலம் ஷங்கர் இந்த படத்தில் நடைமுறைப்படுத்தியிருந்தார். படத்தில் சேனாபதி மற்றும் சந்த்ரு என இருவேறு கேரக்டர்களில் கமல்ஹாசன் மாஸ் காட்டி நடித்திருந்தார். இந்த படத்தின் பாடல்களும் ஏஆர் ரஹ்மான் இசையில் மிகப்பெரிய பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தியது.

பிரம்மாண்ட பிரமோஷன்கள்: படம் அனைத்து சென்டர்களிலும் மிகப்பெரிய அளவில் வெற்றியை குவித்தது. இந்நிலையில் இந்தியன் 2 படமும் முதல் பாகத்தை போலவே மிகப்பெரிய கவனத்தை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்காக கடந்த சில வாரங்களாகவே இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன், சித்தார்த், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் அடுத்தடுத்த ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஐபிஎல் போட்டியின் நிகழ்ச்சியிலும் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் பேசியதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் சென்னை, ஹைதராபாத், மும்பை, கேரளா ஆகிய இடங்களில் அடுத்தடுத்து பிரமோஷன்களில் ஈடுபட்ட ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணி சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் தங்களது பிரம்மாண்டமான பிரமோஷன்களை மேற்கொண்டு இருந்தனர்.

வேள்பாரி படம்: இந்த இடங்களில் ரசிகர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு இவர்கள் பதிலளித்ததை பார்க்க முடிந்தது. ஷங்கர், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்தும் தனித்தனியாகவும் அடுத்தடுத்த பேட்டிகளையும் பல்வேறு சுவாரசியங்களையும் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் ஷங்கரிடம் இது போன்ற ஒரு பேட்டியில் அவரது கனவு ப்ராஜெக்ட்டான வேள்பாரி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷங்கர், வேள்பாரி நாவலை படிக்கும்படி முன்னதாக தன்னிடம் அதிகமானோர் கூறியதாகவும் ஆனால் அதற்கு நேரம் இல்லாத நிலையில் கொரோனா காலகட்டத்தில் அந்த நாவலை படிக்கும் சூழல் தனக்கு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

3 பாகங்களாக உருவாகும் வேள்பாரி: இந்த நாவலின் காட்சிகள் அதை படிக்கும்போது தனக்குள் விரிந்ததாகவும் உடனடியாக உடனடியாக இதை படமாக்கும் விருப்பத்தில் அதன் ஆசிரியர் சு வெங்கடேசனிடம் பேசி ரைட்சை வாங்கி விட்டதாகவும் ஷங்கர் தெரிவித்துள்ளார். இந்தக் கதையை அடுத்தடுத்து மூன்று பாகங்களாக உருவாக்க திட்டமிட்டு அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளையும் தான் நிறைவு செய்து விட்டதாகவும் ஆனால் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து இன்னும் திட்டமிடவில்லை என்றும் ஷங்கர் தனது பேட்டியில் அடுத்தடுத்து வேள்பாரி படம் குறித்த பேசியுள்ளார். சங்கர் என்றாலே பிரம்மாண்டம் தான் என்ற நிலையில் வேள்பாரி என்ற வரலாற்று நாவலை அவர் திரையில் எப்படி கொடுப்பார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் நீண்ட காலங்களாக ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X