Director Shankar: வேள்பாரி ஸ்கிரிப்ட் ரெடி.. சூட்டிங் எப்ப தெரியுமா.. ஷங்கர் சொன்ன விஷயம்!
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்தியன் 2 படம் சொதப்பலான முடிவையே கொடுத்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பொங்கலையொட்டி ராம்சரண் லீட் கேரக்டரில் நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் ஷங்கர் இயக்கத்தில் ரிலீசாகவுள்ளது.
கேம் சேஞ்சர் படத்தின் பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் படத்தின் ரிலீசுக்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தன்னுடைய கனவு ப்ராஜெக்ட்டான வேள்பாரி குறித்து இயக்குநர் சங்கர் பேசியுள்ளார். இதன் ஸ்கிரிப்ட் வேலைகள் நிறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர்: இந்தியன் 2 படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படம் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் படத்தின் ரிலீசுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். நாளைய தினம் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து நடிகர் ராம்சரண் உற்சாகமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
வேள்பாரி படம்: ரசிகர்களை பார்க்க தான் மிகுந்த ஆர்வமுடன் உள்ளதாகவும் ராம்சரண் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வரும் இயக்குநர் ஷங்கர் தன்னுடைய கனவு ப்ராஜெக்ட்டான வேள்பாரி படம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். வேள்பாரி படத்திற்கான ஸ்கிரிப்ட் ரெடி ஆகிவிட்டதாகவும் இந்த படத்தில் நடிப்பதற்காக திடகாத்திரமான மற்றும் கம்பீரமான நடிகர்களை தேடி வருவதாகவும் ஷங்கர் தெரிவித்துள்ளார். பெரிய பட்ஜெட்டை தாங்கும் நடிகர்கள் தன்னுடைய ஃபர்ஸ்ட் சாய்ஸ் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கான அடுத்தடுத்த விவரங்களை தான் சேகரித்து வருவதாகவும் அனைத்தும் நிறைவடைந்து விட்டால் அப்டேட் சொல்வதாகவும் ஷங்கர் தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று பாகங்கள்: முன்னதாக வேள்பாரி படம் குறித்து பேசியிருந்த ஷங்கர் படத்தை மூன்று பாகங்களாக உருவாக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். இதற்கான ரைட்சை அவர் வேள்பாரி நாவலின் ஆசிரியர் சு வெங்கடேசனிடம் இருந்து பெற்றுள்ள நிலையில் ஸ்கிரிப்ட் வேலைகளை நிறைவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். கேம் சேஞ்சர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இந்தியன் 3 படத்தின் ரிலீசுக்காக ஷங்கர் செயல்படுவார் என்று தெரிகிறது. இந்த வேலைகளை முடித்துவிட்டு அவர் அடுத்ததாக வேள்பாரி படத்தின் வேலைகளில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
ரசிகர்கள் உற்சாகம்: ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் தான் என்ற நிலையில் வேள்பாரி என்ற வரலாற்று நாவலை அவர் எப்படி கொடுப்பார் என்பது குறித்து ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் வேள்பாரி குறித்து பேசியுள்ள ஷங்கர் மிகவும் எனர்ஜெட்டிக்கான நடிகர்களை தேடி வருவதாக கூறியுள்ளது மேலும் ரசிகர்கள் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. பிரம்மாண்டங்களின் இயக்குநர் சங்கரிடம் இருந்து பிரம்மாண்டமான ஒரு வரலாற்று படைப்பு எப்படி இருக்கும் என்பது ரசிகர்களுக்கு தற்போது உற்சாகத்தை கொடுக்கும் விஷயமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications