ஜென்டில்மேன் படத்தில் நடிக்க மறுத்த கமல்ஹாசன்.. என்ன காரணம் தெரியுமா.. ஷங்கர் வருத்தம்!
சென்னை: நடிகர் ராம்சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் பொங்கல் கொண்டாட்டமாக இன்றைய தினம் தியைரங்குகளில் ரிலீசாகியுள்ளது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் சூழலில் ஷங்கர் படத்திற்கான பிரம்மாண்டத்திற்காகவே இந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் அதிகமான ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தப் படத்திற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் அதிகமான ஈடுபட்ட நிலையில் இயக்குநர் ஷங்கரும் தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த மொழிகளில் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டார். அவருடைய பேட்டிகளில் படம் குறித்தும் தன்னுடைய முந்தைய படங்கள், அடுத்த பிராஜெக்ட்கள் உள்ளிட்டவை குறித்தும் அவர் அடுத்தடுத்த பகிர்வுகளை செய்திருந்தார்.

கேம் சேஞ்சர் படம்: நடிகர் ராம்சரண் -இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படம் இன்றைய தினம் பொங்கல் கொண்டாட்டமாக திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. தமன் இசையில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்ற நிலையில், கேம் சேஞ்சர் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்தப் படத்திற்கு முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் வெளியாக சொதப்பிய இந்தியன் 2 படமே பெட்டர் என்ற விமர்சனங்களுக்கும் கேம் சேஞ்சர் படத்திற்கு கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் தெலுங்கில் என்ட்ரி கொடுத்துள்ளார் ஷங்கர். படம் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கர்: இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் முன்னதாக ராம்சரண், அஞ்சலி, ஷங்கர், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் ஈடுபட்டனர். ஷங்கர் தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு பல பேட்டிகளை கொடுத்திருந்தார். அதில் தன்னுடைய முந்தைய படங்களின் அனுபவங்கள், அடுத்த பிராஜெக்ட்கள், கேம் சேஞ்சர் படத்தின் எக்ஸ்பீரியன்ஸ்களை பகிர்ந்திருந்தார். பல்வேறு மீடியாக்களில் அவரது அடுத்தடுத்த பேட்டிகளில் மிகுந்த கவனத்தை பெற்றன. இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் முன்னதாக அர்ஜுன் லீட் கேரக்டரில் நடித்து வெளியாகி சிறப்பான வெற்றியை பெற்ற ஜென்டில்மேன் படம் குறித்தும் ஷங்கர் சுவாரஸ்யங்களை பகிர்ந்திருந்தார்.
ஜென்டில்மேன் படம்: முன்னதாக இந்தப் படத்தில் நடிக்க தான் சரத்குமாரை தேர்வு செய்ததாகவும், அவரது டேட்ஸ் மற்றொரு தயாரிப்பு நிறுவனத்திடம் லாக்காகி இருந்த நிலையில், தான் அவர்களிடம் இதுகுறித்து பேசியதாகவும் ஷங்கர் கூறியுள்ளார். ஆனால் அவர்களோ, தாங்கள் கமல்ஹாசனை வைத்து படம் தயாரிக்கவுள்ளதாகவும் அவரை வைத்து இந்த கதைக்களத்தில் படத்தை இயக்க கேட்டதாகவும் ஷங்கர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தான் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் ஆனாலும் முயற்சித்து பார்க்கலாமே என்ற எண்ணத்தில் கமல்ஹாசனிடம் கதை சொன்னதாகவும் ஷங்கர் தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஷங்கருடன் இணைய மறுத்த கமல்ஹாசன்: ஆனால் இந்தப் படத்தில் நடிக்க கமல்ஹாசன் மறுத்துவிட்டதாகவும் ஷங்கர் தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் மைக்கேல் மதன காம ராஜான் படத்தில் இதேபோன்றதொரு வேடத்தில் கமல்ஹாசன் நடித்திருந்ததால் இந்த கேரக்டர் ரிபீட் செய்யும் வகையில் அமையும் என்று இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க மறுத்ததையும் ஷங்கர் சுட்டிக் காட்டியுள்ளார். இதை தொடர்ந்தே நடிகர் அர்ஜுனை லீட் கேரக்டரில் நடிக்க வைத்து ஜென்டில்மேன் படத்தை தான் எடுத்ததாகவும் ஷங்கர் கூறியுள்ளார். இந்தப் படத்தின் நாயகன் பிராமணனாக நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் அவரது உண்மையான முகம் வெளிப்படும்வகையில் படத்தின் கேரக்டர் அமைந்திருந்தது.


Click it and Unblock the Notifications











