Shankar: பயோ பிக்னா அது சூப்பர்ஸ்டாரோடதுதான்.. தெளிவாக திட்டமிடும் இயக்குநர் ஷங்கர்!

சென்னை: நடிகர் ராம்சரண் லீட் கேரக்டரில் நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் இன்னும் சில தினங்களில் பொங்கல் கொண்டாட்டமாக திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.

இயக்குநர் ஷங்கர் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வரும் நிலையில் தன்னுடைய முந்தைய படங்கள், அடுத்தடுத்த படங்கள் குறித்தும் அவர் பேசி வருகிறார். கேம் சேஞ்சர் படத்தை தொடர்ந்து இந்தியன் 3, வேள்பாரி படங்களின் வேலைகளில் தான் ஈடுபட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

shankar rajinikanth game changer

இயக்குநர் ஷங்கர்: நடிகர் ராம்சரணின் அடுத்தடுத்த படங்கள் டோலிவுட்டில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் அதிகமான கவனத்தை பெற்று வருகின்றன. ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படம் உருவாகி இன்னும் சில தினங்களில் பொங்கல் கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் அடுததடுத்த பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தன்னுடைய முந்தைய படங்கள் குறித்தும் கேம் சேஞ்சர் படத்தை தொடர்ந்து தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்தும் ஷங்கர் பேசி வருகிறார்.

கேம் சேஞ்சர் பட பிரமோஷன்: கேம் சேஞ்சர் படம் தற்போது ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்தடுத்த படங்கள் குறித்தும் அவர் பேசியுள்ளார். அடுத்ததாக இந்தியன் 3 மற்றும் வேள்பாரி படங்களில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கேம் சேஞ்சர் படத்தின் ரிலீசை தொடர்ந்து இந்தப் படங்களின் வேலைகளை அவர் துவங்கவுள்ளதாக கூறியுள்ள நிலையில், தற்போது பயோ பிக் அதிகளவில் எடுக்கப்பட்டுவரும் நிலையில் அதுகுறித்து ஷங்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு யோசிக்காமல் உடனடியாக ரஜினிகாந்தின் பயோபிக்கை தான் உருவாக்க விரும்புவதாக ஷங்கர் தெரிவித்துள்ளார்.

ரஜினி பயோபிக்கை எடுக்க விருப்பம்: முதலில் இந்த கேள்விக்கு பதிலளித்த ஷங்கர், பயோபிக் எடுக்கும் எண்ணம் எதுவும் இதுவரை வரவில்லை என்றும் எடுத்தால் ரஜினியின் பயோபிக்கைதான் எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ரஜினிகாந்தின் வாழ்க்கை குறித்து அனைவருக்கும் தெரிந்ததுதான் என்று பாராட்டி பேசியுள்ள ஷங்கர், இந்த கேள்வி எழுந்தவுடன் அவரது வாழ்க்கை வரலாறுதான் நினைவுக்கு வந்ததாகவும் கூறியுள்ளார். இந்த பயோபிக்கில் யார் நடிப்பார்கள் என்ற கேள்வியும் எழுப்பப்பட்ட நிலையில், தற்போதுதான் இதுகுறித்த எண்ணமே தோன்றியதாகவும் நடக்கும்போது இதுகுறித்து யோசிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஜினி -ஷங்கர் காம்பினேஷன்: ரஜினிகாந்துடன் இணைந்து ஷங்கர் கூட்டணியில் எந்திரன் உள்ளிட்ட படங்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளன. இந்தியாவில் மட்டுமில்லாமல் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் ரஜினி -ஷங்கர் காம்பினேஷன் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்துள்ளன. இந்நிலையில் சமீபத்திய பேட்டியொன்றில், நல்ல கதை அமைந்தால் ரஜினிகாந்துடன் மீண்டும் இணைய விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் எடுத்தால் ரஜினியின் பயோபிக்கைதான் எடுப்பேன் என்று ஷங்கர் கூறியுள்ளது மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. அடுத்தடுத்து முன்னணி பிரபலங்களின் பயோபிக் வெற்றியடைந்துவரும் நிலையில் ரஜினிகாந்தின் பயோபிக்கும் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X