Director Shankar: கமல்ஹாசன் வரும் காட்சிகள் தெறிக்கும்.. இந்தியன் 2 படத்தின் கதையை சொன்ன ஷங்கர்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன். ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் இந்தியன் 2. இந்த படம் வரும் ஜூலை மாதத்தில் ரிலீசாகவுள்ள நிலையில் இன்றைய தினம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய இயக்குநர் ஷங்கர், அனிருத் படத்திற்கு ஆறு சிறப்பான பாடல்களை கொடுத்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனுக்கு உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

Kamal haasan Indian 2 movie Shankar tamil cinema 2

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் இந்தியன் 2/ இந்த படம் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என அடுத்தடுத்த பாகங்களாக உருவாகியுள்ளது. ஆறு மாத இடைவெளிகளில் இந்த படங்கள் ரிலீசாக உள்ளன. இந்தியன் 2 படம் வரும் ஜூலை மாதம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி இன்றைய தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் கமல்ஹாசனுடன் ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், சித்தார்த் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்தியன் 2 படம்: சென்னை, ஐதராபாத், திருப்பதி, பாங்காக் உள்ளிட்ட பல இடங்களில் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இயக்குனர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டங்களில் உச்சம் என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில் முன்னதாக கடந்த 1996ம் ஆண்டில் வெளியான இந்தியன் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்த படத்தில் கமல்ஹாசன் இருவேறு கெட்டப்களில் நடித்து மாஸ் காட்டியிருந்தார். இந்த படம் அதிகமான விருதுகளையும் அள்ளிய நிலையில் தற்போது பல ஆண்டுகளைக் கடந்து இந்தியன் 2 படம் ரசிகர்களுக்காக திரையிடப்பட காத்திருக்கிறது.

Kamal haasan Indian 2 movie Shankar tamil cinema 2

அனிருத்திற்கு ஷங்கர் பாராட்டு: இந்த படத்தில் சேனாபதி என்ற ஒரே ஒரு கேரக்டரில் மட்டுமே கமல்ஹாசன் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் முக்கியமான நபர்களாக அனிருத், சுபாஸ்கரன் மற்றும் ஷங்கரை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தன்னுடைய எக்ஸ் தல பக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் நடிகர் கமல்ஹாசன் இந்த விழாவிற்கு மிகப்பெரிய வரவேற்புடன் என்ட்ரி கொடுத்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் இந்த படம் குறித்து பேசி உள்ள இயக்குனர் சங்கர் அனிருத்தை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இந்தியன் படத்தின் கதைக்களம்: படத்தில் முதல் முறையாக அனிருத்துடன் இணைந்து தான் பணியாற்ள்ளதாக கூறிய ஷங்கர், அவர் படத்தில் 6 சிறப்பான பாடல்களை கொடுத்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். படத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ஒவ்வொரு காட்சியும் தெறிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மீண்டும் திரும்பவரும் இந்தியன் தாத்தா இன்றைய பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் கதைக்களம் என்று கூறியுள்ள ஷங்கர், இந்தப் படத்தை லைகா நிறுவனம் மிக பிரம்மாண்டமான அளவில் தயாரித்துள்ளதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X